தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: தோட்டத்தில் தோண்ட தோண்ட பிணங்கள் - மத போதகரால் அதிர்ச்சி..!

Crime: தோட்டத்தில் தோண்ட தோண்ட பிணங்கள் - மத போதகரால் அதிர்ச்சி..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 24, 2023 02:35 PM IST

கென்யாவில் மத போதகரின் தோட்டத்தில் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்ததைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கென்யா
கென்யா

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த இடத்தில் ஏராளமான தங்கி உள்ளனர். இங்கு 15க்கும் மேற்பட்டவர்கள் உடல் மெலிந்து மோசமான நிலையில் இருப்பதாகவும், நான்கு பேர் உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தகவல்கள் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மத போதகரின் பண்ணையில் சோதனை நடத்தினர். மேலும் அந்தப் பண்ணையில் நிலத்தைத் தோண்டி ஆய்வு செய்துள்ளனர். பணியில் ஈடுபட்ட போது காவல்துறையினர் முக கவசம் மற்றும் பாதுகாப்பு உடைகள் அணிந்து பணி செய்துள்ளனர்.

அப்போது நிலத்திலிருந்து தோண்ட தோண்ட சடலங்களாகக் கிடைத்துள்ளது. இதனைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதலில் தோன்றும் போது 21 சடலங்கள் கிடைத்துள்ளன. அதற்குப் பிறகு தோண்ட தோண்ட 26 உடல்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் மொத்தமாக 47 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நிலத்தில் புதைக்கப்பட்டு இருந்த அனைத்து உடல்களும் வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு இருந்தன. அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது ரகசியமாக உள்ளது. அங்கு இருப்பவர்களிடம் விசாரித்த போது, பட்டினியாக இருந்தால் இறைவனை நேரடியாகச் சந்திக்க முடியும் என மதபோதகர் தெரிவித்தார் எனக் கூறியுள்ளனர்.

ஒருவேளை இறந்து போனவர்கள் பட்டினி கிடந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மத போதகர் பால் மெகன்சியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த பண்ணை நிலத்தில் உடல்கள் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் நிலத்தைத் தோண்டி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

கிடைத்த அனைத்து சடலங்களையும் காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேதப் பரிசோதனை செய்த பிறகு இறந்தவர்களின் விவரங்கள் குறித்துத் தெரியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கென்யா நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்