தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Telangana: ‘சொத்தைப் பிரித்துக் கொடுங்கள்’ தாயின் உடலை வாங்க மறுத்த மகள்கள்

Telangana: ‘சொத்தைப் பிரித்துக் கொடுங்கள்’ தாயின் உடலை வாங்க மறுத்த மகள்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 08, 2023 12:29 PM IST

சொத்தைப் பிரித்துத் தராத காரணத்தினால் தாயின் உடலை மகள்கள் வாங்க மறுத்து விட்டனர்.

சொத்து சிக்கல்
சொத்து சிக்கல்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த கிஷ்டவ்வாவுக்கு ஆர்பி நகரில் சொந்த வீடும், வங்கிக் கணக்கில் 1.70 லட்சம் பணமும், நகைகளும் உள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது தாயாரிடம் வீடு மற்றும் வங்கியில் இருக்கும் பணம் மற்றும் நகை உள்ளிட்டவற்றை சரிபாதியாக தங்களுக்குப் பிரித்துத் தர வேண்டும் என மகள்கள் இருவரும் வற்புறுத்தி உள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து அவரது தாயார் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயாரைத் தனியாக விட்டுவிட்டு மகள்கள் இருவரும் சென்று விட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கிஷ்டவ்வா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இரண்டு மகள்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் கொடுத்துள்ளனர்.

மகள்கள் மற்றும் உறவினர்கள் உடனே மருத்துவமனைக்கு வந்தனர். தங்களது தாயின் வீடு, பணம் மற்றும் நகை உள்ளிட்டவற்றை தங்களுக்குச் சரி பாதியாகப் பிரித்துக் கொடுத்தால் தாயின் பிணத்தை வாங்கிக் கொள்கிறோம் என தங்களது உறவினர்களிடம் மகள்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் மகள்கள் இருவரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருந்த போதும், இருவரும் சொத்தின் மீது குறியாக இருந்தனர். காவல்துறையினர் தொடர்ந்து பேசியும் மகள்கள் இருவரும் தாயும் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

வேறு வழியில்லாமல் அவரது உடலைப் பிணவறையில் வைத்தனர். இது குறித்துத் தொடர்ந்து மகள்கள் இருவரிடமும் உறவினர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்