தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pm Modi:வடகிழக்கு மாநிலங்கள்! காங்கிரஸ்க்கு Atm; எங்களுக்கு அஷ்டலட்சுமி! மோடி

PM Modi:வடகிழக்கு மாநிலங்கள்! காங்கிரஸ்க்கு ATM; எங்களுக்கு அஷ்டலட்சுமி! மோடி

Kathiravan V HT Tamil
Feb 24, 2023 12:48 PM IST

’வாக்களியுங்கள், மறந்துவிடுங்கள்’ என்பதே காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் வைத்திருந்த கொள்கையாக இருந்தது -மோடி பேச்சு

நாகாலாந்து மாநிலத்தின் பாரம்பரிய உடை அணிந்து பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி
நாகாலாந்து மாநிலத்தின் பாரம்பரிய உடை அணிந்து பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

நாகலாந்து மாநிலம் திமாபூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய அவர், நாகாலாந்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த தேசிய ஜனநாயாக கூட்டணி, இதனால் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1958 மாநிலத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டது.

“உங்கள் மக்களை நம்பி அவர்களின் பிரச்சினைகளுக்கு மதிப்பளித்து தீர்வு காண்பதன் மூலம் நாட்டை நடத்த முடியாது. முன்பு வடகிழக்கில் பிரிவினை அரசியல் இருந்தது, ஆனால் தற்போது அதை தெய்வீக ஆட்சியாக மாற்றி உள்ளோம்.

மத அடிப்படையிலோ அல்லது பிராந்தியம் அடிப்படையிலோ பாகுபாடுகளை பாஜக மக்கள் மீது காட்டுவதில்லை.

பழைய (காங்கிரஸ்) கட்சி டெல்லியில் இருந்து வடகிழக்கு மாநிலங்களை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தி, அதன் வளர்ச்சிக்கான பணத்தை பறித்தது அதே நேரத்தில் "வாரிசு அரசியலுக்கு, டெல்லி முதல் திமாபூர் வரை" அக்கட்சி முன்னுரிமை அளித்தது.

நாகலாந்து மக்கள் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி
நாகலாந்து மக்கள் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி (PTI)

’வாக்களியுங்கள், மறந்துவிடுங்கள்’ என்பதே காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் வைத்திருந்த கொள்கையாக இருந்தது.

டெல்லியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் நாகாலாந்தின் பிரச்சனைகளை காணாமல் இருக்க கண்ணை மூடிக்கொண்டனர். பத்து ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் சூழ்நிலைகள் மாறும் என்று யாரும் கனவு கண்டிருக்க மாட்டார்கள்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊழலில் பாஜக பெரும் பள்ளத்தை ஏற்படுத்தி உள்ளது, இதன் விளைவாக டெல்லியில் இருந்து அனுப்பப்படும் பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாகாலாந்தை இயக்குவதற்கு அமைதி, வளம், வளர்ச்சி ஆகிய மூன்று மந்திரங்களை தாரக மந்திரங்களாக எடுத்து செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசு தீட்டும் ஓவ்வொரு திட்டங்களும் பெண்கள், ஏழைகள், பழங்குடிகள் நலனை முன்வைத்தே தீட்டப்படுகிறது. நாகாலாந்து மாநிலத்தில் இருந்து முதல் பெண் ராஜ்யசபா எம்பியையும் பாஜகத்தான் தேர்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளது.

நாகாலாந்தில் வன்முறை சம்பவங்கள் 75 சதவீதம் குறைந்துள்ளது. வடகிழக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக நாங்கள் உழைத்துள்ளோம்.

மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. சுற்றுலா முதல் தொழில்நுட்பம் வரையிலான துறைகளிலும், விளையாட்டுகள் முதல் ஸ்டார்ட் அப்கள் வரையிலான துறைகளிலும் நாங்கள் இளைஞர்களுக்கு ஆதரவளிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்