தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka : கர்நாடக தேர்தல் பணி தீவிரம் – பாஜக சார்பில் 50 நபர் குழு அமைப்பு

Karnataka : கர்நாடக தேர்தல் பணி தீவிரம் – பாஜக சார்பில் 50 நபர் குழு அமைப்பு

Priyadarshini R HT Tamil
Apr 02, 2023 07:20 AM IST

Karnataka Election : கர்நாடகாவில் தேர்தல் வேலைகளை துவக்குவதற்கு 50 நபர்கள் கொண்ட குழுவை பாரதிய ஜனதா கட்சி அமைக்கிறது.

சந்தோஷ் பிஎல் - பாஜக தேசிய பொது செயலாளர்
சந்தோஷ் பிஎல் - பாஜக தேசிய பொது செயலாளர்

ட்ரெண்டிங் செய்திகள்

கர்நாடனாவில் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள், நாடு முழுவதும் உள்ள கட்சியின் சட்ட அமைப்பாளர்கள் 50 பேரை அழைத்து அவசர கூட்டம் நடத்தினார்கள்.  

இந்த கூட்டத்திற்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், அம்மாநில தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தும் முக்கிய நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்க தேர்தல் பணிகளை பிரித்து கொடுப்பது ஒன்று மட்டுமே இந்த கூட்டத்தின் நோக்கமாகும்.

இது ஆன்லைனில் நடந்த கூட்டம், நாங்கள் கர்நாடகாவை விரைவில் சென்றடைய வேண்டும் குறைந்தபட்சம் 72 மணி நேரத்திலாவது சென்றுவிடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாக கூட்டத்தில் கலந்துகொண்ட பெயர் குறிப்பிட விரும்பாத நபர் தெரிவித்தார். கட்சி 224 தொகுதிகளில் கவனம் செலுத்த வேண்டிய 115 வலுவான இடங்களை கண்டுபிடித்துள்ளதாக இந்த எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு கூறப்பட்டது. ‘நாங்கள் ஒவ்வொருவரும் 2 அல்லது 3 தொகுதியை கையாளவேண்டும். இந்த 115 தொகுதிகளும் பி என்ற நிலையில் உள்ளன. அதாவது ஜெயிப்பது மிகமிகக்கடினம் தான் ஆனால் முயன்றால் ஜெயிக்கலாம் என்ற நிலையில் உள்ளவை“ என்று ஒருவர் தெரிவித்தார். 

இந்த 50 நபர்களில், மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, பீகார் எம்எல்ஏ சஞ்சீவ் சவுரசியா, உத்ரபிரதேச எம்எல்ஏ சதீஷ் திவிவேதி, ஆந்திர பிரதேஷின் சுதாகர் ரெட்டி, எம்பிக்கள் ரமேஷ் பிதூரி, நிஷிகாந்த் துபே மற்றும் சஞ்சய் பாட்டியா ஆகியோர் ஆவார்கள். இதில் பெரும்பாலானோர் அனுபவசாலிகள் மற்றும் பல்வேறு மாநில தேர்தலில் ஏற்கனவே பணியாற்றியவர்கள். 

நான் உத்திரபிரதேசம், உத்ரகாண்ட், ஹிமாச்சல பிரசேதம் என 9 இடத்தில் இதற்கு முன் தேர்தல் பணி செய்துள்ளேன்“ என்று பிதூரி கூறுகிறார். அவர் எங்கு தலைமை ஏற்க வேண்டும் என்ற வழிகாட்டுதலுக்காக காத்திருக்கும்போது பேசினார். அவரது வேலை என்ன என்பது அவருக்கு தெளிவாகத் தெரியும். “நாங்கள் அங்கு சென்று எங்கள் பணியாளர்களிடம் பேசவேண்டும். அது முக்கியமான ஒன்று. அவர்களை உற்சாகப்படுத்தி உழைக்க வைக்க வேண்டும். எங்களின் தேர்தல் வாக்குறுதிகளை அனைத்து வாக்காளர்களிடமும் தெளிவாக கொண்டு செல்ல வேண்டும். டெல்லி பிரதிநிதிகளுக்கு கர்நாடகாவில் மொழிப்பிரச்னை வருமா என்ற கேள்விக்கு ‘நாடு முழுவதும் உள்ள பாஜக பணியாளர்களுக்கு இந்தி தெரியும்‘ என்றார்.  கர்நாடகாவில் மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்