Amit Shah: ‘மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி ஔரங்கசீப் ரசிகர் மன்றம்’ விட்டு விளாசிய அமித் ஷா!
வெற்றி பெற்ற பிறகு பலர் திமிர் பிடித்து இருப்பதை நான் பார்த்து இருப்பேன். ஆனால் தோற்ற ஒருவருக்கு திமிர்பிடிப்பதை ராகுல் காந்தி மூலமாக நான் பார்க்கிறேன்" என்று அமித்ஷா குற்றம்சாட்டினார்

Amit Shah: ‘மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி ஔரங்கசீப் ரசிகர் மன்றம்’ விட்டு விளாசிய அமித் ஷா! (BJP Media)
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஒரு ஔரங்கசீப் ரசிகர் மன்றம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடி உள்ளார்.
மகாராஷ்டிராவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல்
மகாராஷ்டிராவில் தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு முடிவடைவதால், 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இருப்பினும், தேர்தல் ஆணையம் இன்னும் தேதிகளை அறிவிக்கவில்லை.