Uddhav Thackeray:'மகாராஷ்டிரா தேர்தலுக்குப் பின் தாராவி குடிசை மறுவடிவமைப்பு திட்ட டெண்டரை ரத்துசெய்வோம்':உத்தவ் தாக்கரே
Uddhav Thackeray: மகாராஷ்டிரா தேர்தலுக்குப் பின் தாராவி குடிசை மறுவடிவமைப்பு திட்ட டெண்டரை ரத்துசெய்வோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

Uddhav Thackeray:'மகாராஷ்டிரா தேர்தலுக்குப் பின் தாராவி குடிசை மறுவடிவமைப்பு திட்ட டெண்டரை ரத்துசெய்வோம்':உத்தவ் தாக்கரே (PTI)
Uddhav Thackeray: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் மும்பையில் உள்ள தாராவி குடிசை மறு மேம்பாட்டு திட்டத்தை தனது அரசாங்கம் ரத்து செய்யும் என்று சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
தாராவி மறு அபிவிருத்தி திட்டம் குறித்துப் பேசிய உத்தவ் தாக்கரே:
தாராவி மறு அபிவிருத்தி திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த உத்தவ் தாக்கரே, செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றியபோது, "நாங்கள் தாராவி மறு அபிவிருத்தி திட்டத்தை நடக்க விட மாட்டோம்.
தாராவி குடிசைப்பகுதியில், நாங்கள் கூடுதல் சலுகைகளை வழங்கமாட்டோம். தேவைப்பட்டால், ஆட்சிக்கு வந்த பிறகு புதிய டெண்டருக்கு அழைப்பு விடுக்கிறோம்’’என்று கூறினார்.