தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Parliament : எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம்.. நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Parliament : எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம்.. நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Divya Sekar HT Tamil
Jul 31, 2023 11:28 AM IST

மாநிலங்களவையை பகல் 12 மணி வரை அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒத்திவைத்தார்.

மக்களவை ஒத்திவைப்பு
மக்களவை ஒத்திவைப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

மணிப்பூர் பழங்குடி பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட நிலையில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முதல் எதிர்க்கட்சியினர் இதே கோரிக்கையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இன்று 8ஆவது நாளாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மணிப்பூர் சென்று, திரும்பிய எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் குழு இன்று நாடாளுமன்ற கட்டிடத்தில், கூட்டணி கட்சித்தலைவர்களிடம் கள நிலவரம் குறித்து விளக்கினர். இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, டி.ஆர். பாலு, திருமாவளவன், கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் குறித்து, விவாதம் நடத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். 26 கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணியின் 21 எம்.பி.க்கள் ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மணிப்பூருக்கு சென்று அங்கு வன்முறையால் பாதிக்கபட்ட மக்களை சந்தித்து நிலைமையை ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பிரதமர் மோடி, மணிப்பூரில் நடைபெற்ற சம்பவம் எந்த நாகரீக சமூகத்துக்கும் அவமானகரமானது. மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்ட சம்பவம், இந்தியாவிலுள்ள 140 கோடி மக்களையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது. மணிப்பூரின் மகள்களுக்கு ஏற்பட்டதை மன்னிக்கவே முடியாது. எந்த குற்றவாளிகளும் தப்பமாட்டார்கள் என நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்