தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Himachal Pradesh Cloudburst: மேக வெடிப்பு.. இமாச்சலில் விடாமல் கொட்டும் கனமழை.. 7 பேர் பலி.. பள்ளி,கல்லூரிகளுக்கு லீவ்!

Himachal Pradesh Cloudburst: மேக வெடிப்பு.. இமாச்சலில் விடாமல் கொட்டும் கனமழை.. 7 பேர் பலி.. பள்ளி,கல்லூரிகளுக்கு லீவ்!

Divya Sekar HT Tamil
Aug 14, 2023 11:34 AM IST

இமாச்சல பிரதேசத்தில் சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளன.

இமாச்சலில் மேக வெடிப்பு
இமாச்சலில் மேக வெடிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளன. சோலனில் இறந்தவர்கள் ஹர்னம் (38), கமல் கிஷோர் (35), ஹேம்லதா (34), ராகுல் (14), நேஹா (12), கோலு (8), மற்றும் ரக்ஷா (12), என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், சோலன் மாவட்டத்தில் உள்ள மம்லிக் கிராமத்தில் மேக வெடிப்பிற்கு பிறகு 6 பேர் மீட்கப்பட்டுள்ளன. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் இருந்தனர். காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் அண்டை மாநிலமான உத்தரகாண்டில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், நிலச்சரிவுகள் முக்கிய சாலைகளைத் துண்டித்து, பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, கல்வி நிறுவனங்களை மூட வேண்டிய கட்டாயம் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் பெருகியது. இமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் தனியார் பேருந்து ஒன்று மரம் வேரோடு சாய்ந்து வாகனத்தின் மீது விழுந்ததில் கண்டக்டர் காயமடைந்தார்.

மண்டியில் அதிகபட்சமாக 236, சிம்லாவில் 59 மற்றும் பிலாஸ்பூர் மாவட்டத்தில் 40 என மொத்தம் 621 சாலைகள் தற்போது வாகனப் போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளதாக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. சிம்லா மற்றும் சண்டிகரை இணைக்கும் சிம்லா-கல்கா தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய பகுதி கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மேக வெடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் ஆதரவையும் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கனமழையைக் கருத்தில் கொண்டு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நிர்வாக ஊழியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், சாலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை சீராக பராமரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்