தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  100 Episodes Of Mann Ki Batt : மனதின் குரல் 100 எபிசோட்கள் ‘உண்மையாகவே ஒரு சிறப்பான பயணம்’ - மோடி நெகிழ்ச்சி

100 Episodes of Mann Ki Batt : மனதின் குரல் 100 எபிசோட்கள் ‘உண்மையாகவே ஒரு சிறப்பான பயணம்’ - மோடி நெகிழ்ச்சி

Priyadarshini R HT Tamil
Apr 30, 2023 12:47 PM IST

100 Episodes of Mann Ki Batt : 100வது எபிசோடை நிறைவு செய்துள்ள மனதின் குரல் நிகழ்ச்சி உண்மையாகவே ஒரு சிறந்த பயணம் என்று பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார்.

கோப்புப்படம் - பிரதமர் மோடி
கோப்புப்படம் - பிரதமர் மோடி

ட்ரெண்டிங் செய்திகள்

100 எபிசோட்களை நிறைவு செய்துள்ள மனதின் குரல் நிகழ்ச்சி உண்மையிலேயே எனது மனதுக்கு நெருக்கமான சிறப்பான ஒன்றாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டீல் தெரிவித்துள்ளார். அவரது மாதாந்திர ரேடியோ நிகழ்ச்சி 11 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும்.

11 மணிக்கு ரேடியோவில் மன்கிபாத் நிகழ்ச்சியை கேட்டு மகிழுங்கள். இது உண்மையிலேயே ஒரு சிறப்பான பயணம். இந்திய மக்களின் கூட்டு உணர்வை நாங்கள் கொண்டாடியுள்ளோம். எழுச்சியூட்டும் வாழ்க்கை பயணங்களை முன்னிலைப்படுத்தியுள்ளோம் என்று பிரதமர் மோடி தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் முதல் எபிசோட் 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு மாதமும் கடை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பானது. கடைசியாக மார்ச் 26ம் தேதி ஒலிபரப்பானது.

தினசரி அரசு நடவடிக்கைகளை மக்களுடன் பகிர்ந்துகொள்வது இந்நிகழ்ச்சியின் குறிக்கோளாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை தெரிவித்தது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியின் 100வது எபிசோட் நேரடியாக ஐக்கிய நாடுகள் தலைமையிடமான நியூயார்கில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு ஒளிபரப்புகளை லண்டனைச் சேர்ந்த பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகமும் செய்திருந்தது.

இந்தியாவிலும் இந்த நிகழ்ச்சிகளின் சிறப்பு ஒளிபரப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்