தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Zero Discrimination Day Do You Know The History Significance And Theme Of Zero Discrimination Day

Zero Discrimination Day : பாகுபாடுகள் ஒழிப்பு நாள், வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் என்ன தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Mar 01, 2024 06:00 AM IST

Zero Discrimination Day : பாகுபாடுகள் ஒழிப்பு நாள், வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் என்ன தெரியுமா?

Zero Discrimination Day : பாகுபாடுகள் ஒழிப்பு நாள், வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் என்ன தெரியுமா?
Zero Discrimination Day : பாகுபாடுகள் ஒழிப்பு நாள், வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் என்ன தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

கோஃபி அனன் ஒருமுறை கூறியது என்ன தெரியுமா? நாம் வேறு மதங்களை சார்ந்தவர்களாக இருக்கலாம், வேறு மொழி பேசுபவர்களாக இருக்கலாம், வேறு நிறம் கொண்டவர்களாக இருக்கலாம், ஆனால் நாம் அனைவரும் ஒரே மனித இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த பொன்மொழியை நாம் உள்வாங்க முயற்சிக்கிறோம். மேலும் அது ஒரு நோயாக மாறுவதற்கு முன், இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துவரும் வெறுப்பு மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக அன்பை ஒரு சிகிச்சையாக அல்லது எதிர்ப்பாகப் பயன்படுத்த முயற்சிக்கிறோம்.

பாகுபாடுகள் ஒழிப்பு நாள் அனைவரையும் அடக்கிய, சமமான, அமைதி மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் அவர்கள் அமைதியாக வாழ அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு தெரியப்படுத்த இந்தநாள் கடைபிடிக்கப்படுகிறது. பாகுபாடுகள் குறித்து பேசி, தனிநபர்களில், இனங்களில், சமுதாயங்களில் அதன் பாதிப்புகள் குறித்து, தெரியப்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும்.

நாள்

பாகுபாடு ஒழிப்பு நாள் ஆண்டுதோறும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.

வரலாறு

UNAIDS, எச்ஜவி வைரஸ் (HIV) மற்றும் எய்ட்ஸ் (AIDS) தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டமான UNAIDS, டிசம்பர் 2013ல் 'உலக எய்ட்ஸ் தினத்தில்' அதன் பூஜ்ஜிய பாகுபாடு பிரச்சாரத்தைத் தொடங்கிய பின்னர், இந்த நாள் முதலில் மார்ச் 1, 2014 அன்று கொண்டாடப்பட்டது. UNAIDS இன் அப்போதைய நிர்வாக இயக்குனர் மைக்கேல் சிடிபே 2014ம் ஆண்டு பெய்ஜிங்கில் ஒரு முக்கிய நிகழ்வுடன் இத்தினத்தை தொடங்கினார்.

முக்கியத்துவம்

பாகுபாடுகள் ஒழிப்பு தினம், உலகம் முழுவதும் சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. எந்த வகையான பாகுபாடும் மனிதர்களை பாதிக்கச் செய்கிறது. இது மனித உரிமைகளை மீறுகிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் தடையை ஏற்படுத்துகிறது. இது இறுதியில் வறுமை மற்றும் சமத்துவமின்மையை நிலைநிறுத்துகிறது.

UNAIDSன் கூற்றுப்படி, ‘குற்றமயம், பாகுபாடு மற்றும் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது. இது ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கான வாய்ப்பை மக்களிடம் பறிக்கிறது மற்றும் எய்ட்ஸ் நோயின் முடிவைத் தடுக்கிறது. உயிர்களைக் காப்பாற்ற குற்றமயமாக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இந்த நாளின் இந்தாண்டு கருப்பொருள், ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது, ஒவ்வொருவரின் உரிமையை பாதுகாப்பது என்பதாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்