Yeast Infection : பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுகளைப் போக்க வைட்டமின் ஈ உதவுமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Yeast Infection : பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுகளைப் போக்க வைட்டமின் ஈ உதவுமா?

Yeast Infection : பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுகளைப் போக்க வைட்டமின் ஈ உதவுமா?

Priyadarshini R HT Tamil
Jun 02, 2024 03:00 PM IST

Yeast Infection : பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுகளைப் போக்க வைட்டமின் ஈ உதவுமா என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Yeast Infection : பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுகளைப் போக்க வைட்டமின் ஈ உதவுமா?
Yeast Infection : பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுகளைப் போக்க வைட்டமின் ஈ உதவுமா?

பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்படுவது, ஒரு பூஞ்ஜை தொற்றாகும். இது கேன்டிடக அல்பிகேன் என்ற பூஞ்ஜைகள் உங்கள் உடலில் அதிகம் தோன்றினால், ஏற்படும். இதனால் பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, அதிகப்படியான வெள்ப்படுதல் போன்றவை ஏற்படும். உங்கள் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களிலும் ஏற்படும் மாற்றங்கள், உங்கள் பிறப்புறுப்பு சூழலை மாற்றும் தன்மை கொண்டவை. 

அதுவே ஈஸ்ட் வளர்வதற்கும் ஊக்கமளிப்பவை. இதை பூஞ்ஜைக்கு எதிரான மருந்துகள் கொடுத்து குணப்படுத்தலாம். வைட்டமின் ஈயும் பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றைப் போக்கும். ஈஸ்ட் தொற்றை குணப்படுத்த வைட்டமின் ஈ எப்படி உதவும்? அதை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வைட்டமின் இயில் கரையக்கூடிய கொழுப்பு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. 

சளி சவ்வுகள் ஆரோக்கியத்துக்கும். குறிப்பாக பிறப்புறுப்பில் ஏற்படும் சளித்திரவத்தின் ஆரோக்கயத்துக்கும் உதவுகிறது. வைட்டமின் ஈ பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுக்கு முக்கிய மருந்து கிடையாது. இது ஒட்டுமொத்த பிறப்புறுப்பு ஆரோக்கியத்துக்கு உதவும்.

நோய் எதிர்ப்பு மண்டல அரோக்கியத்தை காக்கிறது

வைட்டமின் இ, நோய் எதிர்ப்பு மண்டல ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இது தொற்றுக்களை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் ஈஸ்ட் தொற்றும் அடங்கும். வலுவான நோய் எதிர்ப்பு மண்டலம், கேன்டிடா அதிகம் வளர்வதை தடுக்கிறது. இதனால் தொற்றுகள் அடிக்கடி ஏற்படுவதை தடுக்கிறது.

வீக்கத்துக்கு எதிரான குணங்கள்

வைட்டமின் இ, கேன்டிடா அல்பிகேனால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. வைட்டமின் இயில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அது எரிச்சல், சிவந்த தன்மை மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.

ஈரத்தன்மை மற்றும் குணமாவது

வைட்டமின் இயில் உள்ள ஈரத்தன்மை மற்றும் குணப்படுத்தும் திறன்கள், இதை பயன்படுத்தும்போது, உங்களுக்கு வறட்சியைப் போக்குகிறது. மேலும் பிறப்புறுப்பில் எரிச்சலைப் போக்குகிறது. இது பெண்களுக்கு ஈஸ்ட் தொற்றால் ஏற்படும் அசவுகரியங்களைப் போக்க உதவுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்

வைட்டமின் ஈ ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக ஃப்ரி ராடிக்கல்களிடம் இருந்து ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை போக்குகிறது. இதுகுறித்து தெளிவாக விளக்கம் இல்லையென்றாலும், ஒட்டுமொத்த பிறப்புறுப்பு ஆரோக்கியத்திலும் பங்களிக்கிறது.

வைட்டமின் ஈ ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது. வைட்டமின் இ எண்ணெயை பிறப்புறுப்பின் வெளிப்புறத்தில் தடவுவது அதிகளவில் நன்மைகளைக் கொடுக்கிறது. அந்த இடத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பை போக்குகிறது.

நீங்கள் பயன்படுத்தும் வைட்டமின் ஈ எண்ணெய், சுத்தமானதாகவும், அது பயன்படுத்தப்படும் பொருளும் சுத்தமானதாக இருக்கவேண்டும். வெளியில் அதை பயன்படுத்திவிட்டு, அதன்மீது பர்ஃப்யூம்கள் அல்லது வேதிப்பொருட்கள் நிறைந்த பொருட்களை பயன்படுத்தாதீர்கள். அது உங்கள் சருமத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா?

சிலருக்கு வைட்டமின் இ எண்ணெய் அலர்ஜியைக் கொடுக்கும். எனவே சிறிதளவு தடவிப்பார்த்துவிட்டு, வேறு உபாதைகளை ஏற்படுத்தவில்லையென்றால், தொடர்ந்து பயன்படுத்தலாம்.

வைட்டமின் இ பொருட்கள், நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகளுடன் வினைபுரிய வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை.

பிறப்புறுப்பில் வைட்டமின் இ பயன்படுத்தும்போது, அது உங்கள் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்துகிறது. அங்குள்ள இயற்கை நுண்ணுயிர்களை மற்றும் நோய்களைத் தடுக்கும் நுண்ணுயிர்களை வளரச்செய்கிறது. வைட்டமின் இ எண்ணெயை வெளிப்புற பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தவேண்டும்.

வைட்டமின் இ உங்கள் பிறப்புறுப்பு ஈஸ்ட் பிரச்னைகளுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுத்தாலும், அது தொடர்ந்து ஏற்படும்போது நீங்கள் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. நல்ல உள்ளாடைகளைப் பயன்படுத்துங்கள். அதிக மணமான பொருட்களை பயன்படுத்தாதீர்கள். நல்ல சுகாதாரத்தை பேணுங்கள். உங்கள் உடல் உபாதைகளை குறைப்பதும், ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.