தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Menstrual Hygiene Day 2024 : பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று முதல் சிறுநீர் பாதை பாதிப்பு வரை மாதவிடாய் சுகாதார ஆபத்துக்கள்

Menstrual Hygiene Day 2024 : பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று முதல் சிறுநீர் பாதை பாதிப்பு வரை மாதவிடாய் சுகாதார ஆபத்துக்கள்

Priyadarshini R HT Tamil
May 28, 2024 06:00 AM IST

Menstrual Hygiene Day 2024 : ஈஸ்ட் தொற்று முதல் சிறுநீர் பாதை தொற்று வரை சில ஆபத்துக்கள் மோசமான மாதவிடாய் சுகாதாரத்தால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Menstrual Hygiene Day 2024 : பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று முதல் சிறுநீர் பாதை பாதிப்பு வரை மாதவிடாய் சுகாதார ஆபத்துக்கள் என்ன?
Menstrual Hygiene Day 2024 : பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று முதல் சிறுநீர் பாதை பாதிப்பு வரை மாதவிடாய் சுகாதார ஆபத்துக்கள் என்ன? (Pexels)

ட்ரெண்டிங் செய்திகள்

சிறுமிகள், பெண்கள், திருநங்கைகள், ஆண்கள் மற்றும் பைனரி அல்லாத நபர்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாயை கடக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்த இயற்கையான உயிரியல் செயல்முறையுடன் தொடர்புடைய களங்கங்களை எதிர்கொள்கின்றனர். 

மாதவிடாய் தினம் இன்று ஏன் கொண்டாடப்படுகிறது?

ஒவ்வொரு ஆண்டும், மாதவிடாய் சுகாதார தினம் மே 28ம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. ஏனெனில் ஒரு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்கள் ஆகும். மேலும் ஒரு நபருக்கு பொதுவாக ஐந்து நாட்கள் மாதவிடாய் ஏற்படுகிறது. எனவே ஆண்டின் ஐந்தாவது மாதத்தின் 28 வது நாள் மாதவிடாய் சுகாதார தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

மாதவிடாய் சுகாதாரம் தினம் கட்டுக்கதைகளை உடைத்து, ஆரோக்கியமாக இருக்க, சுகாதாரத்தை பராமரிக்க மக்களை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மோசமான மாதவிடாய் சுகாதாரம் நிறைய உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்த ஆண்டிற்கான மாதவிடாய் சுகாதார தினத்தை கொண்டாட நாம் தயாராகி வரும் நிலையில், நாம் எப்போதும் நல்ல மாதவிடாய் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டிய சில காரணங்கள் இங்கே.

மோசமான மாதவிடாய் சுகாதாரம் தீங்கு விளைவிக்கும்- ஏன் தெரியுமா? 

அசுத்தமான சானிட்டரி நாப்கின்கள் - அசுத்தமான சானிட்டரி நாப்கின்கள் சிறுநீர் தொற்று, பூஞ்சை தொற்று மற்றும் இனப்பெருக்க பாதை நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அவற்றை தேர்ந்தெடுக்கும்போது நாம் கவனமுடன் செயல்படவேண்டும். சானிட்டரி பேட்கள் பல கவர்களில் வருகின்றன. இது பெண்களை மலட்டுத்தன்மைக்கு ஆளாக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தும். எனவே சானிட்டரி நாப்கீன்களை தேர்நதெடுப்பதில் கவனம் தேவை. 

அதிக நேரம் ஒரே நாப்கின்களை அணிவது - பெண்கள் ஒவ்வொரு 6-8 மணி நேரத்திற்கும் தங்கள் சானிட்டரி நாப்கின்களை மாற்றாதபோது, பிறப்புறுப்பில் தடிப்புகள் மற்றும் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படுகிறது. ஒரே நாப்கினை அதிகநேரம் அணிவது தீங்கு விளைவிக்கும். எனவே நல்ல நாப்கீன்களை தேர்ந்தெடுத்து, குறிப்பாக பெண்கள் மென்ஸ்ட்ரூவல் கப் அல்லது துணியில் உள்ள நாப்கீன்களை பயன்படுத்த வேண்டும். 

கைகளை கழுவாமல் இருத்தல் - சானிட்டரி நாப்கின்களை மாற்றிய பின்னர் சோப்பு போட்டு கைகளை கழுவாவிட்டால், அது ஈஸ்ட் தொற்று அல்லது ஹெபடைடிஸ் பிக்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் பேட்களை மாற்றும்போதும் நீங்கள் கைகளை சுத்தமாகக் கழுவவேண்டும். 

பின்புறத்திலிருந்து முன்புறம் கழுவுதல் - மாதவிடாய் காலத்தில், அவசர அவசரமாக நாம் பின்புறத்தில் இருந்து முன்புறத்தில் கழுவுவோம். இது மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். ஏனெனில் இது குடலில் இருந்து பெண்ணுறுப்புக்கு பாக்டீரியாக்கள் நகர வழிவகுக்கும். இது தொற்றுநோய்களை ஏற்படுத்துகிறது. நாம் எப்போதும் முன்னால் இருந்து பின்புறமாக கழுவுவதில் கவனமாக இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் முறையாக கடைபிடித்து சிறந்த மாதவிடாய் சுகாதாரத்தை எய்தி, சிறிய தொற்று முதல் கருப்பை புற்றுநோய் வரை ஏற்படாமல் காப்போம்.  

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்