Relationship : ஒரே நாளில் ஒரு மில்லியன் தொற்றுகள் - பாலியல் நோய்களை தடுக்க செக்ஸ் பாதுகாப்பு டிப்ஸ்கள்
Relationship : நீங்கள் உடலுறவில் தீவிரமாக ஈடுபடும் காலங்களில் எப்படி பாலியல் நோய் தொற்றுகளை தடுக்க முடியும் என்பதற்காக வழங்கப்படும் டிப்ஸ்கள்.

அண்மை காலங்களில், பாலியல் நோய் தொற்றுகள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது. குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதிலும் பெண்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கைப்படி, ஒருநாளில் ஒரு மில்லியன் பேருக்கு பாலியல் நோய் தொற்றுகள் உருவாகிறது என்று கூறுகிறது. சைஃபிள்ஸ், கோனோரியா, க்லமீடியா, டிரைகோமோனியாசிஸ் இவைதான் முக்கியமானவை.
உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் தொற்றுநோய்கள் பாலியல் நோய் தொற்றுகளாகும். இதில் சிலவகை தொற்றுநோய்களுக்கு சிகிச்சை உண்டு. சிலவற்றிற்கு சிகிச்சை கிடையாது. இவை கடுமையான பின்விளைவுகளை பிற்காலத்தில் ஏற்படுத்தலாம். பாலியல் தொற்றுநோயின் நீண்ட கால பாதிப்புகள் கடுமையானதாக இருக்கலாம். இவை இனப்பெருக்கம் மற்றும் பாலியல் தொடர்பானதாக இருக்கலாம்.
எனவே நீங்கள் தொடர் பாலியல் உறவுகளில் ஈடுபட துவங்கியவுடன் பாலியல் நோய் தொற்றுகள் அவை கொண்டு வரும் தீவிர விளைவுகள் குறித்து தெரிந்துகொள்வது நல்லது. அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து அறிந்துகொள்வது அவசியமாகிறது.