தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Where Around India Can You Celebrate Summer? What Are The Top 10 Tourist Destinations?

HT Tour Special : இந்தியா முழுக்க எங்கெல்லாம் பயணித்து கோடையை கொண்டாடலாம்? டா்ப 10 டூரிஸ்ட் இடங்கள் என்ன?

Priyadarshini R HT Tamil
May 26, 2023 10:47 AM IST

Summer Destination in India : கோடையில் இந்தியாவின் இந்த 10 இடங்களை மிஸ் செய்து விடாதீர்கள். இங்கு செல்வது உங்கள் ஊற்றிசுற்றி மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், உங்களுக்கு தேவையான மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்தி தருகிறது.

இந்தியாவில் கோடை சுற்றுலா தலங்கள்
இந்தியாவில் கோடை சுற்றுலா தலங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிர் பில்லிங், கோடையில் சகாச சுற்றுலாவை விரும்புபவரா? இந்த இடம் உங்களுக்கான இடம். இங்கு நிலவும் காற்று மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த அழகு, உங்களை நிச்சயம் கவரும். இங்கு பாராகிளைடிங், ஒரு திரில்லிங்கான அனுபவத்தை வழங்கும். இயற்கையை நேசிப்பவர்களுக்கு ஒரு சொர்க்கம்தான் இந்த பார் பில்லிங்

கோவா, இந்தியாவில் இருந்துவிடடு கோவாவை பார்க்கவில்லையென்றால் அது தவறு. எனவே ஒருமுறை கோவாவுக்கு சென்று வந்துவிடுங்கள். இங்கு ஆண்டு முழுவதும் எதாவது ஒரு கொண்டாட்டம் இருந்துகொண்டே இருக்கும். பீச்கள், கடல் உணவுகள், கிளப்கள், பார்கள், நடனம், இசை என கொண்டாட்டமான கோடை சுற்றுலாவுக்கு நிச்சயம் ஏற்ற இடம் கோவா. கோட்டைகளும், தேவாலயங்களும் உங்கள் மனதை கவரும்.

கூர்க், கர்நாடகாவின் மலைப்பகுதிகளில் உள்ளது இந்த கூர்க், பசுமை போர்த்திய நிலங்கள், காஃபி தயாரிக்கும் மலைகள், காஃபி கிளப்கள், பாரம்பரியமிக்க இயற்கை சூழ் இடங்கள் என கூர்க்கின் அழகை உங்கள் வாழ்க்கையில் சந்திக்க மறந்துவிடாதீர்கள்.

மணாலி, கோடையில் கட்டாயம் செல்லவேண்டிய இடம் இந்த மணாலி, பனி படர்ந்த மலைகள், இமயமலையின் எழிலை கண்டு ரசிக்க சிறந்த இடம் இந்த மணாலி, இது சுற்றுலா பயணிகளை தன்னக்தே ஈர்க்கும் தன்மை கொண்ட இயற்கை எழில் சூழ்ந்தது. இங்கு சாகச சுற்றுலாவும் நடைபெறுகிறது.

சிம்லா, டெல்லியிலிருந்து சிம்லாவுக்கு பஸ் பயணம்தான சிறந்தது. கண்ணாடி கதவுகள் வழியே இயற்கை எழிலை ரசித்துக்கொண்டே ஊர் சுற்றலாம். முர்ச்சையடைச்செய்யும் நிலங்களை பஸ் பயணித்தில் பார்க்கும்போது உங்களை மேலும் உற்சாகப்படுத்தும், கோடை காலங்களில் குடும்பத்திருனருடன் சுற்றுலா செல்ல சிறந்த இடம் சிம்லா

காசோல், பார்வதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஹிமாச்சல பிரதேசத்தின் இயற்கை எழில் சூழ்ந்த இடம். மலையேற்றத்திற்க புகழ்பெற்றது. இதற்கும் டெல்லியில் இருந்து பஸ்சில் செல்வது சிறந்தது. கீர்கங்கா, டோஷ், மலானவில் மலையேற்றம் செய்யலாம், சாகச சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடம். பார்வதி பள்ளத்தாக்கின் எழில் உங்களை மீண்டும், மீண்டும் அழைக்கும்.

பாண்டிச்சேரி, இங்கு இந்திய - பிரெஞ்ச் பாரம்பரியத்தை பறைசாற்றும் பாண்டிச்சேரிக்கு நிச்சயம் ஒரு டிரிப் அடித்துவிடுங்கள். பிரெஞ்ச் வீடுகள் அமைந்த தெருக்கள் எழில்மிக்கவையாக இருக்கும். பீச்சில் ரிலாக்ஸ் செய்யலாம். இங்கு தண்ணீர் விளையாட்டுகள் சாகச சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் இருக்கும். பெங்களூருவில் இருந்து பஸ் பயணம் இதற்கு சிறந்தது.

டேராடூன், இங்கு சென்றால் நிச்சயம் ஒரு மறக்க முடியாத சுற்றுலா அனுபவத்தை இது கொடுக்கும். மார்ச் - ஜீன் மாதத்தில் இங்கு சுற்றுலா செல்ல ஏற்ற காலம். இந்த காலத்தில் இங்கு வானிலை இதமாக இருக்கும். குகைகள், தண்ணீர் என இங்கு கண்டு மகிழ நிறைய இடங்கள் உள்ளது. உண்மையில் உங்களுக்கான சிறந்த தருணம் இங்கு காத்திருக்கிறது. நிச்சயம் அதை மறந்துவிடாதீர்கள்.

ஐம்மு, காஷ்மீர், தால் ஏரி இவற்றையெல்லாம் நிச்சயம் பார்த்து விட வேண்டும். இயற்கையின் பொக்கிஷமே இங்குதான் உள்ளது. மன்சார் ஏரி, வைஷ்ணோ தேவி கோயில் என திரிகுதா மலைகள் உங்களை மலைக்கச்செய்யும்.

மஹாபலேஸ்வர், காடும், மலையும், அருவியும், குருவியும் என ஆர்ப்பரிக்கு அழகை தன்னுள் கொண்டுள்ள, இந்தியாவில் நீங்கள் நிச்சயம் சுற்றி பார்க்க வேண்டிய இடம். வென்னா ஏரியில் போட்டிங், ஸ்டாரபெரி வயல்கள், பழமைவாய்ந்த கோயில்கள் சுற்றுலா பயணிகளை நிச்சயம் கவரும்.

இந்தியாவில் சுற்றிப்பார்க்க இத்தனை இடங்கள் இருக்கும்போது, ஆண்டுக்கு ஒரு இடம் தேர்வு செய்து சுற்றிவிட்டு வாருங்கள். ஹாப்பி ஹாலிடேஸ்!

 

WhatsApp channel

டாபிக்ஸ்