தொளதொள தொப்பையைக் குறைத்து, கடகடவென உடல் எடையை குறைக்கவேண்டுமா? இந்த உணவுகள் உதவும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தொளதொள தொப்பையைக் குறைத்து, கடகடவென உடல் எடையை குறைக்கவேண்டுமா? இந்த உணவுகள் உதவும்!

தொளதொள தொப்பையைக் குறைத்து, கடகடவென உடல் எடையை குறைக்கவேண்டுமா? இந்த உணவுகள் உதவும்!

Priyadarshini R HT Tamil
Dec 07, 2024 08:00 AM IST

உடல் எடையைக் குறைக்க நீங்கள் செய்யவேண்டியது என்ன?

தொளதொள தொப்பையைக் குறைத்து, கடகடவென உடல் எடையை குறைக்கவேண்டுமா? இந்த உணவுகள் உதவும்!
தொளதொள தொப்பையைக் குறைத்து, கடகடவென உடல் எடையை குறைக்கவேண்டுமா? இந்த உணவுகள் உதவும்!

கீரைகள்

கீரைகள், லெட்யூஸ், காலே போன்றவற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம். இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். எனவே உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தின் சிறந்த நண்பனாக கீரைகள் இருக்கும்.

கிரீன் டீ

கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள உடல் வளர்சிதையை ஊக்குவிக்கும் உட்பொருட்கள் மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவும் உட்பொருட்கள் இரண்டும், இதை உடல் எடையை குறைக்க உதவும் பானமாக்க உதவுகிறது.

முட்டைகள்

முட்டைகளில் அதிகளவில் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம். இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தரும் ஒரு காலை உணவு ஆகும். இது உங்கள் பசியைக் கட்டுப்படுத்தும். இது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும்.

பெரிகள்

ஸ்ட்ராபெரிகள், ப்ளூபெரிகள் மற்றும் ராஷ்பெரிகளில் கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின்கள் அதிகம். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்களும் அதிகம். இது உங்களின் இனிப்பு சாப்பிடவேண்டும் என்ற தேவையை பூர்த்தி செய்யும். இது உங்கள் உடல் எடையை பராமரிக்க உதவும்.

அவோகேடோ

அவகேடோக்களில் அதிகளவில் ஆரோக்கியமான மோனோ சாச்சுரேடட் கொழுப்புகள் உள்ளது. இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தருகிறது. பசியைக் குறைக்கிறது. உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள கூடுதல் ஊட்டச்சத்துக்கள், உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.

கிரீக் யோகர்ட்

கிரீக் யோகர்டில் சர்க்கரை குறைவாக உள்ளது. இதில் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவுகிறது. உடலின் வளர்சிதையை ஊக்குவிக்கிறது. பசியைக் குறைக்கிறது. இதை நீங்கள் உடல் எடை குறைப்பு உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பீன்ஸ்கள் மற்றும் பருப்புகள்

நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. கொண்டைக்கடலை போன்ற பருப்புகள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தரும். அதிக கலோரிகள் உட்கொள்வதைத் தடுக்கும். இதில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை கட்டாயம் உங்கள் உடல் எடை குறைப்பு உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

சியா விதைகள்

சியா விதைகளில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளன. இது தண்ணீரை நன்றாக உறிஞ்சுகிறது. இதை சாப்பிடும்போது, உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தருகிறது. இது பசியைக் கட்டுப்படுத்துகிறது. உங்கள் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.

முழு தானியங்கள்

குயினோவா, சிவப்பு அரிசி, ஓட்ஸ் போன்றவை உங்களுக்கு நீண்ட நேரம் ஆற்றலையும் கொடுத்து, பசியையும் கட்டுப்படுத்தி வைக்கின்றன. இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுப்பதால், பசியின்றி, நீங்கள் கண்ட உணவையும் உட்கொண்டு கலோரிகளை ஏற்றிக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். எனவே உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில் இந்த முழு தானியங்களை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

ஃபேட்டி ஃபிஷ்

சால்மன் உள்ளிட்ட கொழுப்பு அதிகம் நிறைந்த மீன்களில், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். வீக்கத்தைக் குறைக்கும். இது புரதச்சத்துக்கள் அதிகம் கொண்ட உணவு ஆகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.