திருமணமுறிவு.. ஒரு பக்கம் உடல்நலக்குறைவு.. மறுபக்கம் தந்தையின் மரணம்.. கலங்கி நிற்கும் சமந்தா
- திருமணமுறிவு.. ஒரு பக்கம் உடல்நலக்குறைவு.. தந்தையின் மரணம்.. கலங்கி நிற்கும் சமந்தாவின் தற்போதைய நிலை என்ன பார்ப்போம்.
- திருமணமுறிவு.. ஒரு பக்கம் உடல்நலக்குறைவு.. தந்தையின் மரணம்.. கலங்கி நிற்கும் சமந்தாவின் தற்போதைய நிலை என்ன பார்ப்போம்.
(1 / 6)
முன்னாள் கணவர் நாகசைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணத்தால், நடிகை சமந்தா கடும் மன உளைச்சலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.இதுதொடர்பாக கிங் 24*7 யூட்யூப் சேனல் அளித்த தகவலின்படி, ‘’தமிழ்த்திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி கதாநாயகியாக இருப்பவர், சமந்தா. முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்திருக்கும் நடிகை சமந்தா, தற்போது பல இந்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அதேபோல், தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான நாகார்ஜூனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவை, 2017ஆம் ஆண்டு காதலித்து கோலாகலமாக திருமணம் செய்துகொண்டார், நடிகை சமந்தா.அந்த திருமண விழாவுக்குப் பின் நாம் பார்க்கும்போது, சிறந்த ஜோடி எனப் பலரால் பேசப்பட்ட நாகசைதன்யா மற்றும் சமந்தா ஜோடி, சில வருடங்களுக்குள் பிரிந்தது.
(2 / 6)
இதுதொடர்பாக கிங் 24*7 யூட்யூப் சேனல் அளித்த தகவலின்படி, ‘’தமிழ்த்திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி கதாநாயகியாக இருப்பவர், சமந்தா. முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்திருக்கும் நடிகை சமந்தா, தற்போது பல இந்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அதேபோல், தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான நாகார்ஜூனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவை, 2017ஆம் ஆண்டு காதலித்து கோலாகலமாக திருமணம் செய்துகொண்டார், நடிகை சமந்தா.அந்த திருமண விழாவுக்குப் பின் நாம் பார்க்கும்போது, சிறந்த ஜோடி எனப் பலரால் பேசப்பட்ட நாகசைதன்யா மற்றும் சமந்தா ஜோடி, சில வருடங்களுக்குள் பிரிந்தது''.
(3 / 6)
‘'2021ஆம் ஆண்டு இருவரும் தங்கள் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துவிட்டனர். நாகசைதன்யாவுடனான திருமணம் முடிவுக்கு வந்தபின், மயோசிடீஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டார், நடிகை சமந்தா. இதனால் மனதளவிலும் உடல் ரீதியாகவும் பல்வேறு கஷ்டங்களைச் சந்தித்து வருகிறார், நடிகை சமந்தா. தற்போது அந்த நோயின் பிடியில் இருந்து மீண்டு வந்தார்கள் என்றே சொல்லலாம். கடந்த சில தினங்களுக்கு முன் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபுவும் காலமாகிவிட்டார்.ஒரு பக்கம் தந்தையின் மறைவு தரும் துயரம். மற்றொரு பக்கம் தன் முன்னாள் கணவருக்குத் திருமணம். இவையெல்லாமே கசப்பான அனுபவங்களையே சமந்தாவுக்குத் தந்திருக்கிறது. இதனால் விரக்தியில் உச்சத்தில் இருக்கிறார், சமந்தா''.
(4 / 6)
‘’அப்போது தனக்கு ஜீவானாம்சம் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டாங்க, சமந்தா. மேலும் இரண்டு பேரும் சேர்ந்து வாங்கிபோட்ட சொத்துகளில் மட்டும் தனது பங்கை கொடுக்கச் சொல்லியிருந்தாங்க, நடிகை சமந்தா. நாகசைதன்யாவை திருமணம் செய்யும்போது நடிகை சமந்தாவுக்குப் பெரிதாக எந்தவொரு சொத்துக்களும் இல்லை. நாகசைதன்யாவை திருமணம் செய்த சோபிதா துலிபாலா தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவரிடம் 10 முதல் 15 கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கின்றன''.
(5 / 6)
‘’சமந்தாவுடனான பிரிவுக்குப் பின், நல்ல முறையில் நாகசைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் நடந்தது நமக்குத் தெரியும். சோபிதா ஆந்திராவைச் சார்ந்தவர். 32 வயது ஆனவர்.இவர் 2013ஆம் ஆண்டு அழகிப்போட்டியில் பங்கு பெற்று வெற்றிவாகை சூடியிருக்கார். அடுத்து, பாலிவுட்டில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ராமன் ராகவ் 2.0 படத்தில் அறிமுகமாகி, அதன்பின் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தவர்''.
(6 / 6)
சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மனின் காதலியாக வானதியாக சோபிதா நடித்திருந்தார். அதில் சின்னஞ்சிறு முகபாவனைகள் மூலம் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது நாகசைதன்யாவை கரம்பிடித்திருக்கிறார், சோபிதா.நாகார்ஜூனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில்,டிசம்பர் 4ஆம் தேதி இரவு 8 மணிக்குத் தான் நாகசைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் நடைபெற்றது. அதன்பின் நள்ளிரவு வரை திருமணச்சடங்குகள் நடைபெற்றன.ஆந்திராவின் பாரம்பரிய உடையான பஞ்ச கச்ச உடையணிந்து ஜொலித்தார், நாகசைதன்யா. திருமணம் முடிந்தவுடன் சோபிதா ஆனந்தக் கண்ணீர் விட்டார்’’ என தகவல் சொல்லியிருக்கிறது, கிங் 24*7 யூட்யூப் சேனல்நன்றி: கிங் 24*7 யூட்யூப் சேனல்பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!
மற்ற கேலரிக்கள்