தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Tomato Dosai Delicious Dosa Made With Tomatoes That Keeps On Eating

Tomato Dosai : சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் சுவையில், தக்காளியில் செய்யலாம் அருமையான தோசை!

Priyadarshini R HT Tamil
Mar 04, 2024 10:40 AM IST

Tomato Dosai : சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் சுவையில், தக்காளியில் செய்யலாம் அருமையான தோசை!

Tomato Dosai : சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் சுவையில், தக்காளியில் செய்யலாம் அருமையான தோசை!
Tomato Dosai : சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் சுவையில், தக்காளியில் செய்யலாம் அருமையான தோசை!

ட்ரெண்டிங் செய்திகள்

பச்சரிசி – அரை கப்

உளுந்தம்பருப்பு – கால் கப்

நன்றாக பழுத்த தக்காளி – 4

மிளகாய் வற்றல் – 5

மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து இரண்டு முறை கழுவிக் கொள்ளவேண்டும். பின் போதுமான நீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் மிளகாய் வற்றல் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து பல்ஸ் அல்லது விப்பர் மோடில் தண்ணீர் விடாமல் அரைக்கவேண்டும்.

பின் ஊறவைத்தவற்றை இரண்டு பாகங்களாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அதிக மிருதுவாக இல்லாமல் கொர கொரப்பாகவும் இல்லாமல் அரைத்துக் கொள்ளவேண்டும். மாவை கைகளால் எடுத்து பார்த்தால் லேசான கொர கொரப்பான பதத்தில் இருக்க வேண்டும்.

பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவேண்டும். பின் மிக்ஸி ஜாரை அலசி ஒன்று முதல் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.

பின் தேவையான அளவு உப்பு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.

இவற்றை கலந்த பின் தேவைப்பட்டால் மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். மாவை கலந்து பார்க்கும்போது கெட்டியான மோர் பதத்தில் இருக்க வேண்டும். (ரவா தோசைக்கு மாவு கரைக்கும்போது மாவு நீர் மோர் போல தண்ணீராக இருக்கும். இந்த மாவு அதை விட கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்)

இப்போது ஒரு இரும்பு தோசைக்கல்லை மிதமான சூட்டில் காயவைத்து தோசைக்கல்லின் ஓரங்களில் இருந்து சுற்றி ஊற்ற வேண்டும். நடுவில் இருக்கும் இடைவெளியை மேலும் சிறிது மாவில் நிரப்பவேண்டும்.

தோசை லேசாக வெந்த பின் தோசையின் மேல்புறமும் சுற்றிலும் 2 ஸ்பூன் எண்ணெய்விட்டு குறைந்த சூட்டில் வைத்து பொறுமையாக வேகவைக்கவேண்டும். கீழ்புறம் பொன்னிறமாக மாறியதும் மெதுவாக திருப்பிப் போட்டு முறுகலானதும் இறக்கவேண்டும்.

தீயை அதிகமாக வைக்காமல் பொறுமையாக வேகவைத்து எடுத்தால் தக்காளி தோசையின் சுவை அருமையாக இருக்கும். பொதுவாக தோசை செய்யும்போது மாவை நடுப்பகுதியில் ஊற்றி சுற்றி விடுவது வழக்கம். 

ஆனால் தக்காளி தோசைக்கு ரவா தோசை செய்வது போல செய்து பாருங்கள் உங்களுக்கே வித்தியாசம் தெரியும். உங்களுக்கு செய்வதற்கு கடினமாக இருந்தால் தண்ணீரை குறைத்துக்கொண்டு மற்ற தோசை செய்வது போலவே செய்து பாருங்கள்.

தக்காளியின் நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இது தென்அமெரிக்காவை சேர்ந்த ஒரு பழம். என்றாலும் இதை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துகிறோம்.

இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட். ஒரு தக்காளி 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் ஃபிலோகுயினோன் என்ற வைட்டமின் கே சத்து உள்ளது. இது ரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இது கர்ப்பிணிகளுக்கு நல்லது.

இதில் உள்ள ஃபோலேட் என்ற வைட்டமின் பி, திசுக்கள் வளர்ச்சிக்கும், செல்களின் இயக்கத்துக்கும் உதவுகிறது. இதுவும் கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து.

இதில் உள்ள லைக்கோபெனே என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது. உடலில் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது.

தக்காளியின் தோலில் உள்ள நரிஜெனின் என்ற ஃப்ளேவனாய்ட், அலர்ஜியை குறைக்க உதவுகிறது. பல்வேறு நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. கொலோரோஜெனிக் அமிலம் என்பது, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

லைக்கோபெனே, குளோரோஃபில்ஸ் மற்றும் கெரோட்டினாய்ட்ஸ் அகியவைதான், தக்காளியின் பளபள நிறத்துக்கு காரணமாகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel