Fairness Cream Kidney Failure : சரும அழகு கிரீம்களால் சிறுநீரக பிரச்சனைகள் அபாயம்.. ஆய்வில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
Fairness Cream Kidney Failure : பேஸ் க்ரீம்களை தடவுவதால் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.. ஆனால் அழகுக்கு பயன்படுத்தி வரும் ஃபேஸ் க்ரீமுக்கும் சிறுநீரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதா என்று நீங்கள் நினைக்கலாம்.

Fairness Cream Kidney Failure : பொதுவாக ஆண்களும் பெண்களும் தங்களை அழகாக காட்டிக்கொள்ள அழகுசாதனப் பொருட்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதற்காக எந்த அளவுக்கும் பணமும் நேரமும் செலவு செய்ய தயாராக உள்ளனர். சன் க்ரீம், ஸ்கின் க்ரீம், ஃபவுண்டேஷன், மாய்சரைசர் எனப் பல்வேறு அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி உங்களை அழகாக்கிக் கொள்ளப் பயன்படுத்துகின்றனர். ஒரு அதிர்ச்சியூட்டும் ஆய்வு இந்த அழகு சாதனப் பொருட்களின் பின்னால் உள்ள ஆபத்தை வெளிப்படுத்துகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் செயற்கையான முறையில் பல்வேறு வேதிப்பொருட்களால் தான் தயாரிக்க படுகிறது.
இதே மாதிரி புழக்கத்தில் இருக்கும் பல்வேறு ஃபேஸ் க்ரீம்கள் இப்போது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கி வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த க்ரீம்களை தடவுவதால் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிய வருகிறது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.. ஆனால் அழகுக்கு பயன்படுத்தி வரும் ஃபேஸ் க்ரீமுக்கும் சிறுநீரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இங்கே ஒரு இணைப்பு நமக்கு பல்வேறு விசயங்களை சொல்வதாக உள்ளது.
ஆய்வின் படி, சரும கிரீம்களை அதிகமாக பயன்படுத்துவதால், சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. அந்த கிரீம்களில் பாதரசம் அதிகம். இது தோல் மூலம் உடலில் உள்ள பாகங்களுக்கு ஊடுருவ சாத்தியம் ஆகிறது. இது சிறுநீரகத்தை சேதப்படுத்தும். அதுமட்டுமல்லாமல், சிறுநீரகத்தை பாதிக்கும் சவ்வு நெப்ரோபதியும் சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது.