தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Peanut Chutney : டிஃபனுக்கு தினமும் ஒரே மாதிரி சட்னி செய்வது போரிங்கா? வித்யாசமான சுவையில் வேர்க்கடலை சட்னி!

Peanut Chutney : டிஃபனுக்கு தினமும் ஒரே மாதிரி சட்னி செய்வது போரிங்கா? வித்யாசமான சுவையில் வேர்க்கடலை சட்னி!

Priyadarshini R HT Tamil
Aug 21, 2023 12:01 PM IST

Peanut Chutney : தினமும் இட்லி, தோசைக்கு போன்ற டிஃபன்களுக்கு ஒரே மாதிரி சட்னி அரைத்து போர் அடித்து விட்டதா? இதோ இந்த வேர்க்கடலை சட்னியை அரைத்து பாருங்கள். வித்யாசமான சுவையிலும் இருக்கும். வேர்க்கடலை ஆரோக்கியம் நிறைந்தது என்பதால், அதன் நன்மைகளும் கிடைக்கும்.

சுவையான வேர்க்கடலைச் சட்னி செய்வது எப்படி?
சுவையான வேர்க்கடலைச் சட்னி செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

வேர்க்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – ஒரு கப்

புளி – எலுமிச்சை அளவு

காய்ந்த மிளகாய் – 4

கறிவேப்பிலை – 1 கொத்து

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

பூண்டு – 6 பல்

தேங்காய் – 4 ஸ்பூன் (துருவியது)

கடுகு – கால் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

வேர்கடலையை ஒரு கடாயில் போட்டு வறுத்து, தோல் நீக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய், புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், தேங்காய் என அனைத்தையும் சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

வறுத்து வைத்துள்ள அனைத்தும் நன்றாக ஆறியதும், ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் என அனைத்தும் சேர்த்து நன்றாக பொரிந்ததும், அரைத்து தயாராக உள்ள சட்னியை அதில் சேர்த்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

உங்களுக்கு தண்ணீர் வேண்டுமானால் தண்ணீர் அதிகம் சேர்த்து, தண்ணீர் பதத்தில் வைத்துக்கொள்ளலாம்.

கெட்டியாக வேண்டுமென்றால் தண்ணீர் சேர்க்காமல், துவையல் பதத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்