தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pasi Paruppu Pakkoda: சத்துக்கள் நிறைந்த பாசிப் பருப்பு பக்கோடா செய்வது எப்படி?

Pasi Paruppu Pakkoda: சத்துக்கள் நிறைந்த பாசிப் பருப்பு பக்கோடா செய்வது எப்படி?

Manigandan K T HT Tamil
Aug 28, 2023 12:00 PM IST

ஈவ்னிங் ஸ்நாக்ஸாக பாசிப் பருப்பு பக்கோடாவை செய்து சாப்பிடலாம். ருசியான இந்த பக்கோடாவை செய்வது எப்படி என பார்ப்போம்.

பாசிப்பருப்பு பக்கோடா
பாசிப்பருப்பு பக்கோடா

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

பாசி பருப்பு - 1 கப்

உளுத்தம் பருப்பு - 1/4 கப்

பச்சரிசி - 1/4 கப்

வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது

இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது

பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது

உப்பு - 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

ஓமம் - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை நறுக்கியது

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பாசி பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சரிசி சேர்த்து நன்கு கழுவி 2 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீர் இன்றி சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். மாவை பாத்திரத்திற்கு மாற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, பெருங்காயத்தூள், ஓமம், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்துவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் தயார் செய்த மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அருமையான பாசி பருப்பு பக்கோடா தயார்.

பயன்கள்

இது அதிக அளவில் புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது. முளைக்கட்டிய பாசிப்பயறு உடற்குறைப்பு சமச்சீர் உணவாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொழுக்கட்டை, மோதகம், பொங்கல், பாயசம், கஞ்சி ஆகிய பண்டங்கள் பாசிப்பயற்றைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. சில இடங்களில் அரிசியும், சிறுபயறும் சேர்த்து கஞ்சியாக உண்ணப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்