தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : உங்கள் குழந்தையின் நம்பிக்கையான பெற்றோராவது எப்படி? இந்த டிப்ஸ்களை பின்பற்றி பலன் பெறுங்கள்!

Parenting Tips : உங்கள் குழந்தையின் நம்பிக்கையான பெற்றோராவது எப்படி? இந்த டிப்ஸ்களை பின்பற்றி பலன் பெறுங்கள்!

Priyadarshini R HT Tamil
Mar 25, 2024 01:36 PM IST

Parenting Tips : உங்கள் குழந்தையின் நம்பிக்கையான பெற்றோராவது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கு இந்த டிப்ஸ்களை பின்பற்றி பலன் பெறுங்கள்.

Parenting Tips : உங்கள் குழந்தையின் நம்பிக்கையான பெற்றோராவது எப்படி? இந்த டிப்ஸ்களை பின்பற்றி பலன் பெறுங்கள்!
Parenting Tips : உங்கள் குழந்தையின் நம்பிக்கையான பெற்றோராவது எப்படி? இந்த டிப்ஸ்களை பின்பற்றி பலன் பெறுங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

உங்கள் குழந்தைகள் கூறுவதை நம்புங்கள்

நம்பிக்கையை உருவாக்குவதில் அடிப்படையான ஒன்று உங்கள் குழந்தைகளின் வார்த்தைகளை நம்புவது. அவர்கள் எப்போதும் அவர்களை முழுமையாக வெளிப்படுத்தமாட்டார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அவர்களின் சிந்தனைகளும், உணர்வுகளும் மதிக்கப்படவேண்டும். 

அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கிக் கொடுங்கள். அவர்கள் உங்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லும் ஒரு சூழலை உருவாக்கிக்கொடுங்கள். அவர்களின் அனுபவங்கள் மற்றும் கோணங்களை ஏற்றுக்கொள்வது, உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்கும்.

பொறுமை

பேரன்டிங் சவால்கள் நிறைந்த ஒரு பயணம் தான். சில நேரங்களில் நீங்கள் பொறுமை காக்க முடியாமல் போகும். இதனால் நீங்கள் அதிகமாக திட்டிவிடுவீர்கள். எனவே நீங்கள் அதிக கோவப்பட்ட தருணத்திற்காக அவர்களிடம் மன்னிப்பு கோருங்கள். நீங்கள் உங்கள் நடவடிக்கைகளுக்காக பொறுப்பெடுத்துக்கொள்ளுங்கள். 

இந்த தருணத்தில் நீங்கள் மன்னிப்பு கேட்பதுடன், இந்த நேரத்தில் அவர்களுக்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் பொறுப்பேற்பது குறித்து கற்றுக்கொடுங்கள். உங்கள் உறவுகளை சரிசெய்ய பயன்படுத்துங்கள். இருதரப்பு மரியாதை மற்றும் புரிதல் ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தையும் செய்து காட்டுங்கள்.

ஒழுக்கம்

ஒழுக்கம் குழந்தைகளுக்கு வழிகாட்டுவதற்கு மிகவும் அவசியமான ஒன்றுதான். அமைதியாகக் கொள்வது போன்ற தண்டனை முறைகள் குழந்தை – பெற்றோர் உறவில் விரிசலை ஏற்படுத்தும். தண்டனைகள் கொடுதுது குற்றங்களை குறைப்பதை விட, அவர்களின் பேசி பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள். அவர்களின் செயல்களுக்கான காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். 

அவர்களிடம் பேசுங்கள். இணைந்து நல்ல தீர்வுகளை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். ஒருங்கிணைந்த அணுகுமுறையால், உங்கள் குழந்தைகளுக்கு பொறுப்பெடுக்க கற்றுக்கொடுக்கிறீர்கள். அவர்களின் நடவடிக்கைகளுக்கு அவர்கள் பொறுப்பெடுக்கும்போதுதான் அவர்கள் வளர்கிறார்கள். இதன் மூலம் அவர்களிடம் நம்பிக்கை மற்றும் மரியாதை இரண்டும் வளர்கிறது.

பாராட்டுக்கள்

சில முறைகளில் நடந்துகொள்வதற்காக அவர்களை நீங்கள் பாராட்டாதீர்கள். அது அவர்களுக்கு தவறான ஒன்றை போதிக்கும். அதாவது இவ்வாறு நடந்துகொண்டால் நாம் பாராட்டப்படுவோம் என்று அவர்கள் எண்ணுவார்கள். மாறாக, அவர்களின் முயற்சிகளுக்காக அவர்களை பாராட்டுங்கள். அவர்கள் வெல்கிறார்களா என்பது முக்கியமல்ல. 

ஆனால் அவர்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுங்கள். உங்கள் குழந்தைகளின் தனித்தன்மையை ஊக்கப்படுத்துங்கள். அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கு அவர்கள தூண்டுங்கள். அவர்களின் தனித்தன்மை மற்றும் அவர்களின் சுயமதிப்பு அவர்களுக்கும் உங்களுக்குமான உறவில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். இருதரப்புக்கும் இது நல்லது.

உங்கள் பிரச்னைகளுக்கு உங்கள் குழந்தைகளை பலியாக்காதீர்கள்

பெற்றோரின் சுமைகளை குழந்தைகள் சுமக்க வேண்டும் என்பதல்ல. அவர்கள் மீது அழுத்தம் கொடுப்பதை தவிருங்கள். உங்களின் கனவுகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணாதீர்கள். சுயவிழப்புணர்வு பழகுங்கள். மனஅழுத்தத்தையும் உணர்வுகளையும் கையாள ஆரோக்கியமான வழிகளை தேர்ந்தெடுங்கள். 

உங்களை கவனித்துக்கொள்வது மற்றும் உணர்வு ரீதியான மீண்டெழும் முயற்சிகளை செய்து குழந்தைகளுக்கு முன்மாதிரியாகுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எல்லைகளை வகுத்துக்கொடுங்கள். அவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

ஒப்பீடு

உங்கள் குழந்தைகளை யாருடனும், அவர்களின் உடன் பிறந்தவர்களுடன் கூட ஒப்பீடு செய்யாதீர்கள். ஒப்பீடு என்பதுதான் மகிழ்ச்சியின் எதிரி, குறிப்பாக பெற்றோர் – குழந்தை உறவை அது சிதைத்துவிடும். உங்கள் குழந்தைகளின் தனித்திறமைகளை பாராட்டுங்கள். அவர்களின் பலங்கள் மற்றும் திறமைகளை கொண்டாடுங்கள். அவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்குங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்கப்பட்ட உணர்வு வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும் அங்கீகரிக்கப்படவேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்