Parenting Tips : உங்கள் குழந்தைகளை மகிழச்சியுடன் வாழவைக்க வேண்டுமா? அதற்கான வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்!
Parenting Tips : உங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியாக வளர்க்க உதவும் வழிகள் என்னவென்று தெரியுமா?

மகிழ்ச்சியான குழந்தைகளை வளர்ப்பது
ஒவ்வொரு பெற்றோரின் விருப்பமும் தங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியாக வளர்ப்பதுதான். அவர்களின உடல், மன ஆரோக்கியம், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கக்கூடிய விஷயங்களை முன்னெடுப்பது.
ஆரோக்கியமான உறவுமுறைகளை கொடுப்பது என அவர்களுக்கு தேவையானவற்றை செய்வது பெற்றோரின் கடமை. மகிழ்ச்சியான குழந்தைகளை வளர்ப்பதற்கான வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
மகிழ்ச்சியான நாளின் துவக்கம்
உங்கள் குழந்தைகளை அன்புடன் ஏழுப்புங்கள். பற்றுதலுடனும், ஒரு புன்னகையுடனும் உங்கள் குழந்தைகளை படுக்கையில் இருந்து எழுப்ப வேண்டும். இது அந்த குழந்தையின் நாளை நேர்மறை எண்ணங்களுடன் துவங்குவதற்கு உதவும்.
உங்கள் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள்
உங்கள் குழந்தைகள் செய்யும் முயற்சிகளுக்காக அவர்களுக்கு நன்றி கூறுங்கள். அவர்களை பாராட்டுங்கள். அவர்களின் தினசரி வேலைகளை அவர்கள் சரியான முறையில் செய்து முடிக்க உதவுங்கள். இது அவர்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
உங்கள் குழந்தைகளை திருத்துங்கள்
உங்கள் குழந்தைகள் தவறு செய்யும்போது அவர்களை திருத்துங்கள். அவர்களுக்கு தேவையான விளக்கங்களை கொடுங்கள். அதில் இருந்து அவர்கள் கற்க முடியும். எனவே உங்கள் குழந்தைகள் தவறில் இருந்து பாடம் கற்க உதவுங்கள்.
உணவு நேரத்தை மகிழ்ச்சியானதாக்குங்கள்
உங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியாக சாப்பிட வைப்பது பெற்றோரக உங்களின் கடமை. குழந்தைப்பருவத்தில் அவர்களுக்கு குடும்ப நேரம் என்பது மிகவும் அவசியம். நீங்கள் இந்த நேரத்தை உங்கள் குழந்தைகளுக்காக ஒதுக்க வேணடும். அது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் மற்றும் நீங்கள் உணவு உண்ட திருப்தியையும் கொடுக்கும்.
அமைதியான உறக்கம்
நீங்கள் இரவு நேரத்தில் செய்யும் வேலைகள் அனைத்தும் அமைதி நிறைந்ததாகவும், உங்களை ரிலாக்ஸ் செய்வதாகவும் இருக்கட்டும். உறங்கச் செல்லும் முன் நீங்கள் ஏதேனும் நல்ல கதை புத்தகங்கள் அல்லது கடவுள் பாடல்களை அவர்களுக்கு வாசித்து காட்ட வேண்டும். இதனால் உங்கள் குழந்தைகள் அமைதியாக உறங்க முடியும்.
நீங்கள் பயன்படுத்தும் மொழியை கவனியுங்கள்
உங்கள் குழந்தைகளை அவமானப்படுத்தும் வார்த்தைகளை பேசாதீர்கள். கடுமையான மொழிகளை உங்கள் குழந்தைகளிடம் தவிர்த்துவிடுங்கள். உங்களின் உணர்வுகள் மற்றும் கஷ்டங்களை அவர்களிடம் பொறுமையாக எடுத்துக்கூற முயற்சி செய்யுங்கள். அவர்களிடம் கத்தாதீர்கள். நீங்கள் பொறுமையாக கூறினாலே அவர்கள் உணர்வார்கள்.
குழந்தைகளை அவமானப்படுத்தாதீர்கள்
உங்கள் குழந்தைகளை பொது இடத்தில் நீங்கள் திட்டினாலோ அல்லது கத்தினாலோ அது உங்கள் இருவர் உறவையும் பாதிக்கும். எனவே உங்கள் குழந்தைகளை அவமானப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். நீங்கள் அவர்களை அவமானப்படுத்தினால் அது அவர்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கும்.
புன்னகை செய்யுங்கள்
உங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும்போது புன்னகையுடன் அனுப்புங்கள். இது உங்களையும், உங்கள் குழந்தையையும் மகிழ்ச்சியாக வைக்கும். உங்கள் குழந்தை பள்ளியில் இருந்து திரும்பி வரும்போது அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரியுங்கள். இது அவர்களுக்கும், உங்களுக்கு நல்லுறவை மேம்படுத்தும்.
அவர்களின் முயற்சிகளுக்கு மதிப்பு கொடுங்கள்
உங்கள் குழந்தைகளின் முயற்சிகளுக்கு மதிப்பளியுங்கள். அவர்களிடம் பர்ஃபெக்சனை எதிர்பார்க்காதீர்கள். அவர்களின் கடும் உழைப்பை நீங்கள் மதித்தால் போதும், அவர்கள் அதை கற்றுக்கொள்வார்கள். இந்த இளம் வயதிலேயே அவர்கள் செய்யும் முயற்சிகளுக்காக அவர்களை பாராட்டுங்கள். இந்த குறிப்புக்களை பின்பற்றி உங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியானவராக மாற்றுங்கள்.

டாபிக்ஸ்