தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : நீங்கள் அடாவடி பெற்றோரா அல்லது அரவணைக்கும் பெற்றோரா? உங்கள் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன?

Parenting Tips : நீங்கள் அடாவடி பெற்றோரா அல்லது அரவணைக்கும் பெற்றோரா? உங்கள் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன?

Priyadarshini R HT Tamil
Apr 12, 2024 01:27 PM IST

Parenting Tips : இந்திய குழந்தைகள் இதைத்தான் பெற்றோரிடம் எதிர்பார்க்கிறார்களாம்.

Parenting Tips : நீங்கள் அடாவடி பெற்றோரா அல்லது அரவணைக்கும் பெற்றோரா? உங்கள் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன?
Parenting Tips : நீங்கள் அடாவடி பெற்றோரா அல்லது அரவணைக்கும் பெற்றோரா? உங்கள் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

தங்கள் பெற்றோர்கள், தங்கள் மீது அனுதாபம் கொள்ள வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்களின் கோணம், கருத்து, தேவை என அனைத்தையும் அவர்கள் அங்கீகரிக்க வேஷ்டும். அவர்களின் கோணத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்ப்பதாக கூறுப்படுகிறது. அவர்களிடம் இரக்கம் காட்டுவதை குழந்தைகள் எதிர்பார்க்கிறார்கள்.

குழந்தைகளின் கோணத்தில் கவனம் செலுத்துங்கள்

குழந்தைகள் அவர்களின் கோணத்தில் இருந்து பெற்றோர்கள் தங்களை அணுகவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பெற்றோர்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். 

அவர்களின் காலத்தில் நடந்தவற்றை எடுத்துக்காட்டாக கூறிக்கொண்டு இருக்கக்கூடாது என்று குழந்தைகள் எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே நாங்களெல்லாம் அந்தக்காலத்தில் என்ற கோட்பாடுகள் அனைத்தும் இந்த கால குழந்தைகளிடம் செல்லுபடியாகாது.

அவர்களின் தவறுகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்

குழந்தைகளுக்கு தவறு செய்ய இடம் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். குற்றவுணர்வு, தாழ்வு மனப்பான்மை அல்லது தண்டனை இல்லாத தோல்வியை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் மீது அனுதாபம், இரக்கம் ஆகியவை கொள்ள வேண்டும். அவர்களின் தவறுகளை புரிந்துகொண்டு, இழப்பில் இருந்து மீண்டு வருவதற்கு அவர்களுகு உதவி, அவர்கள் வளரவும், முன்னேறவும் வழிவகுக்கவேண்டும்.

சமூக ஏற்பு

அவர்களுடன் பழகும் குழந்தைகளை தங்கள் பெற்றோர் ஏற்க வேண்டும் என்று குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள். அவர்களின் மகிழ்ச்சி மற்றும் சமூக வளர்ச்சிக்கு நட்பு மிகவும் முக்கியமானது என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்க்கிறார்கள்.

தங்கள் வயதையொத்தவர்களுடன் இணைந்திருத்தல் மற்றும் ஏற்றுக்கொள்வது

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தங்களை புரிந்துகொள்ளவேண்டும், அவர்களின் நண்பர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

சமூகத்தில் ஒரு அங்கமாக அவர்கள் இருப்பதற்கும், அவர்களின் வயதையொத்தவர்கள் அவர்களுக்கு உதவவேண்டும் என்றும் விரும்புகிறார்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது, சேர்ந்து வாழவேண்டும் என்ற அவர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது.

நிபந்தனையற்ற ஆதரவு

குழந்தைகள் தங்களின் பெற்றோர் அவர்களுக்கு நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவை வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். வாழ்வின் எந்தமாதிரியான பின்னடைவுகளில் இருந்தும் குழந்தைகளை அவர்கள் மீட்டெடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அவர்களுக்கு உணர்வு ரீதியான பாதுகாப்பு மற்றும் அவர்கள் பெற்றோரின் தொடர் ஆதரவு ஆகியவை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

உணர்வு வெளிப்பாடுகளுக்கு இடம்

குழந்தைகள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு இடத்தை விரும்புகிறார்கள். அவர்களால் தங்களின் எவ்வித உணர்வுகளையும் எந்த தயக்கமுமின்றி வெளிப்படுத்த ஒரு வெளி வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அவர்களுக்கு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது, எவ்வித அணுமானதும், விமர்சனமும் எழக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் பெற்றோருக்கு அவர்களுக்கு ஆதரவான சூழலை வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் ஏற்ற இரக்கம் இரண்டிலும் அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

படிப்பை கடந்து கிரியேட்டிவாக இருக்கவேண்டும்

குழந்தைகளிடம் உள்ள தனித்திறமையை வளர்த்தெடுக்க பெற்றோர் உதவவேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் விருப்பங்கள் மற்றும் ஹாபிக்களை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உதவவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

படிப்பைக் கடந்த கிரியேட்டிவான விஷயங்களை செய்வதற்கு பெற்றோர் தூண்டுதலாக இருக்க வேண்டும். அவர்களின் விருப்பத்தை தேர்ந்தெடுக்கவேண்டும், அவர்களின் தனித்திறமைகளை வளர்க்க வேண்டும். அவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அவர்களுக்கு கிரியேட்டிவான சூழலை உருவாக்கித்தரவேண்டும்.

திறந்த உரையாடலுக்கான இடம்

குழந்தைகள், தங்களின் பெற்றோர், பாதுகாப்பான, விமர்சனங்கள் இல்லாத ஒரு சூழலை குழந்தைகளுக்கு உருவாக்கித்தரவேண்டும் என்று விரும்புகிறார்கள். பூப்பெய்துவது, வளரிளம் பருவ டாப்பிக்குகள் குறித்து பேசும்போது, அவர்களை அனுமதிக்க வேண்டும்.

திறந்த நேர்மையான உரையாடல் என்பது கட்டாயம் இருக்கவேண்டும். எந்த ஒரு கட்டுக்கதைகள் மற்றும் தயக்கத்தை ஒழிப்பதாக உரையாடல்கள் இருக்கவேண்டும்.

தனித்தன்மையை மதிக்க வேண்டும்

குழந்தைகள் அவர்களின் தனித்தன்மையை பெற்றோர்கள் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களை முடிவுகளை எடுக்குமளவுக்கு தயார்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களின் சுதந்திரத்தை பெற அவர்களை அனுமதிக்கவேண்டும். அதற்கு ஆதரவான சூழலை உருவாக்கித்தரவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்