Lok Sabha Election 2024: அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களை நீக்க மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Lok Sabha Election 2024: அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களை நீக்க மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

Lok Sabha Election 2024: அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களை நீக்க மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

Marimuthu M HT Tamil
Mar 20, 2024 09:42 PM IST

நாடு முழுவதும் பல இடங்களில் அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்கள் இன்னும் காட்சிப்படுத்தப்படுவதாக காங்கிரஸிடமிருந்து புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Political hoardings dot the Jhansi skyscape in the run-up to polling day.
Lok Sabha Election 2024: அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களை நீக்க மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

நாடு முழுவதும் பல இடங்களில் அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்கள் இன்னும் காட்சிப்படுத்தப்படுவதாக காங்கிரஸிடமிருந்து புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மார்ச் 16அன்று, இந்திய தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் 2024ஆம் ஆண்டுக்கான தேதிகளை அறிவித்துள்ளது. அதன்பின், மாதிரி நடத்தை விதிமுறை (MCC - MODEL CODE OF CONDUCT) நடைமுறைக்கு வந்தது. இது ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, எந்தவொரு அரசியல் விளம்பரத்தையும் காட்டத் தடை விதிக்கிறது. 

"இந்திய தேர்தல் ஆணையம் அதன் அறிவுறுத்தல்களுக்கு இணங்காதது / ஓரளவு இணங்குவது குறித்து தீவிரமாக கவனித்துள்ளது. மேலும் அனைத்து அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களையும் உடனடியாக அகற்றவும், மேற்கூறிய அறிவுறுத்தல்களுக்கு முழுமையாக இணங்குவதை உறுதி செய்யவும் அனைத்து மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்களுக்கும் இதன்மூலம் அறிவுறுத்துகிறது" என்று தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

"நாடு முழுவதும் பல இடங்களில் இன்னும் அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதாக காங்கிரஸ் மற்றும் பிற தரப்பில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்துள்ளன" என்று இந்திய தேர்தல் ஆணையம் மேலும் கூறியது. 

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் உள்ள உண்மை சரிபார்ப்பு பிரிவுக்கு இது குறித்து ஆராய்ந்து கவனமுடன் செயல்பாடுமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலின் போது தவறான தகவல்கள் பரவுவதற்கு எதிராக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் (சி.இ.சி) ராஜீவ் குமார் முன்னரே எச்சரித்து இருந்தார். சமூக ஊடக தளங்களில் பரவும் போலி செய்திகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் விரைவில் "கட்டுக்கதை vs ரியாலிட்டி" திட்டத்தை அறிமுகப்படுத்தும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய ராஜீவ் குமார் கூறியிருக்கிறார்.

சமூக ஊடக தளங்களில் பரப்பப்படும் போலி செய்திகள் மற்றும் விவரிப்புகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்த தகவல்களை மித் வெர்சஸ் ரியாலிட்டி என்னும் நிகழ்ச்சியை வழங்கப் போகிறது.

அரசியல் கட்சிகள் பொறுப்பான சமூக ஊடக நடத்தையை உறுதி செய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதுடன், போலி செய்திகளை உருவாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

வரவிருக்கும் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள், 18ஆவது மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல்களில், அரசியல் கட்சிகள் பிளவுபடுத்துவதைவிட ஊக்கமளிக்கும் அரசியல் சொற்பொழிவுகளை வளர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஒரு ஆலோசனையையும் வெளியிட்டது.

வெறுக்கத்தக்க பேச்சுகளைத் தவிர்த்து, பிரச்னைகள் அடிப்படையிலான பிரசாரத்தில் கட்சிகள் ஈடுபட வேண்டும் என்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் எடுத்துரைத்தார்.

மது, பணவிநியோகம், பொருள் விநியோகம், வாக்களிக்க வலியுறுத்தி வன்முறை என எந்தவொரு இடையூறு இருந்தாலும் தேர்தல் ஆணையம் தடுக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். 

மேலும் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகளை உடனடியாக அகற்றவேண்டும் எனவும், இதுதொடர்பான அறிக்கையை நாளை மாலை 5 மணிக்குள் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கவும் இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகளை 48 மணிநேரத்தில் அகற்ற அனைத்து மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.