தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mango Payasam : மாம்பழ பாயாசம் செய்து மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டும் சித்திரை பெண்ணை! இதோ ரெசிபி!

Mango Payasam : மாம்பழ பாயாசம் செய்து மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டும் சித்திரை பெண்ணை! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Apr 14, 2024 07:00 AM IST

Mango Payasam : புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாம்பழ பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Mango Payasam : மாம்பழ பாயாசம் செய்து மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டும் சித்திரை பெண்ணை! இதோ ரெசிபி!
Mango Payasam : மாம்பழ பாயாசம் செய்து மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டும் சித்திரை பெண்ணை! இதோ ரெசிபி! (Archana's Kichen)

ட்ரெண்டிங் செய்திகள்

சித்திரை மாதத்தில் முதல் நாள் இந்த புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் காலண்டரில் சித்திரை முதல் மாதம். ஏப்ரலின் மத்தியில் இந்த புத்தாண்டு வருகிறது.

புத்தாண்டு தமிழர்களின் மிக முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. வெகு விமரிசையாகவும், உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இதை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.

தேவையான பொருட்கள்

சேமியா – அரை கப்

பால் – 4 கப்

சர்க்கரை – அரை கப்

மாம்பழ கூழ் – ஒரு கப்

பிஸ்தா அல்லது பாதாம் அல்லது முந்திரி – ஒரு கைப்பிடி

நெய் – ஒரு ஸ்பூன்

மாம்பழம் – 2 ஸ்பூன் (சிறிதளவு)

குங்குமப்பூ – ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் பாலை சேர்த்து கொதிக்க வைத்து, குறைவான தீயில் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். பால் தீய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கொதித்துக்கொண்டிருக்கும் பாலில் இருந்து சிறிது பால் எடுத்து, அதில் குங்குமப்பூக்களை சேர்த்து ஊறவைத்து, அது நன்றாக ஊறி பாலின் நிறம் மாறியதும் அதை மீண்டும் கொதிக்கும் பாலில் சேர்த்துவிடவேண்டும்.

இதில் வறுத்த சேமியாவை சேர்த்து அது வேகும் வரை கிளறிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

இது மிகவும் கெட்டியாகிவிடக்கூடாது. தண்ணீராக இருக்கவேண்டும். ஏனெனில் ஆறினால் மிகவும் கெட்டியாகிவிடும். கொஞ்சம் நீர்த்த நிலையிலேயே அடுப்பை அணைத்துவிடவேண்டும்.

கெட்டியாகி வந்தால் கொஞ்சம் சூடுதண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.

இதில் சர்க்கரையை சேர்க்கும்போது அது இளகி கொஞ்சம் பாயாச பதம் வரும்.

இப்போது சர்க்கரையை சேர்க்கவேண்டும். சூடாக இருக்கும்போதே சர்க்கரையை சேர்க்க வேண்டும்.

அப்போதுதான் சர்க்கரை இளகும். சர்க்கரையை சேர்த்து கொதிக்கவிடக்கூடாது. ஆனால் கண்டஸ்ட் மில்க் சேர்க்கிறீர்கள் என்றால் பாலுடனே சேர்த்துவிடவேண்டும்.

இதை நன்றாக ஆறவிடவேண்டும். அதற்குள் மாம்பழத்தை தோலை நீக்கி, நறுக்கி, சிறிது எடுத்துவைத்துவிட்டு, எஞ்சியதை மிக்ஸிஜாரில் சேர்த்து கூழாக்கிக்கொள்ள வேண்டும்.

அல்ஃபோன்சா மாம்பழம் மிகவும் நல்ல சுவையைத்தரும் அல்லது எந்த மாம்பழத்தின் கூழையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

பாயாசம் ஆறியதும், மாம்பழக்கூழை அதில் சேர்க்க வேண்டும். இதை முந்திரி அல்லது பிஸ்தா அல்லது பாதாம் தூவி அலங்கரிக்க வேண்டும்.

பாயாசம் நன்றாக ஆறியவுடன்தான் மாம்பழத்தை சேர்க்க வேண்டும். இளஞ்சசூடாக இருந்தால் கூட சேர்க்கக்கூடாது. பாயாசத்தை முறைத்துவிடும்.

இதை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாற வேண்டும். பரிமாறும்போது, சிறிது துண்டு மாம்பழங்கள் சேர்க்க வேண்டும். இந்த பாயாசத்தின் சுவை உங்களை அடிக்கடி சாப்பிடத்தூண்டும் வகையில் இருக்கும்.

கட்டாயம் பாயாசம் ஆறியவுடன்தான், மாம்பழக் கூழை சேர்க்க வேண்டும்.

சேமியாவுக்கு பதில் ஜவ்வரிசி கூட சேர்த்துக்கொள்ளலாம்.

நட்ஸ்களை நெய்யில் வறுத்தும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தப்புத்தாண்டை வரவேற்க இதைவிட ஒரு இனிப்பு இருக்க முடியாது. அது மட்டுமின்றி இந்த கோடையில்தான் மாம்பழங்கள் அதிகளவில் கிடைக்கும்.

எனவே இப்போதே கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள். இனிப்பான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை ஹெச்.டி. தமிழ் தெரிவித்துக்கொள்கிறது.

WhatsApp channel