தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Kalyana Virundhu Potato Fry Kalyana Home Potato Masala Easy To Do At Home

Kalyana Virundhu Potato Fry : கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மசாலா; இனி வீட்டிலே செய்யலாம் எளிதாக!

Priyadarshini R HT Tamil
Jan 23, 2024 09:32 AM IST

Kalyana Virundhu Potato Fry : கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மசாலா; இனி வீட்டிலே செய்யலாம் எளிதாக!

Kalyana Virundhu Potato Fry : கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மசாலா; இனி வீட்டிலே செய்யலாம் எளிதாக!
Kalyana Virundhu Potato Fry : கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மசாலா; இனி வீட்டிலே செய்யலாம் எளிதாக! (Didugal Food Court )

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

வேகவைத்த உருளைக்கிழங்கு – அரை கிலோ

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

பெருங்காய தூள் – கால் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பச்சை மிளகாய் – 4 கீறியது

இஞ்சி- பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

தக்காளி – 2 நறுக்கியது

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி இலை – ஒரு கொத்து

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

அனைத்தும் பொரிந்தவுடன், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து, கறிவேப்பிலை சேர்த்து தீயை அதிகரித்து நன்றாக வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அடுத்து தக்காளி சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவேண்டும். தண்ணீர் குறையும் வரை வேகவிடவேண்டும். பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

பின்னர் கரம் மசாலாத்தூள், மல்லித்தழை தூவி நன்றாக கலந்து இறக்க வேண்டும்.

அருமையான கல்யாணவீட்டு உருளைக்கிழங்கு தயார்.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்

உருளைக்கிழங்கின் நன்மைகள்

உருளைக்கிழங்கில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு தேவையான வைட்டமின்களையும் வழங்குகிறது. வைட்டமின் சி, பி6 மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றையும் உடலுக்கு வழங்குகிறது. இது உங்கள் செரிமானத்துக்கு உதவக்கூடியது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. அது கல்லீரல் மற்றும் குடலில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. வெள்ளை உருளைக்கிழங்கைவிட கத்தரிப்பூ நிற உருளைக்கிழங்கில் 4 மடங்கு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது.

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க உதவி செய்கிறது. இது உட்கொள்ளும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதால் அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது.

173 கிராம் உருளைக்கிழங்கில், 161 கலோரிகள், 0.2 கிராம் கொழுப்பு, 4.3 கிராம் புரதச்சத்து, 36.6 கிராம் கார்போஹைட்ரேட், 3.8 கிராம் நார்ச்சத்து, 28 சதவீதம் வைட்டமின் சி, 27 சதவீதம் வைட்டமின் பி6, 26 சதவீதம் பொட்டாசியம், 19 சதவீதம் மேங்கனீஸ், 12 சதவீதம் மெக்னீசியம், 12 சதவீதம் பாஸ்பரஸ், 12 சதவீதம் நியாசின், 12 சதவீதம் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்