Chicken peratu : சிக்கன் பெரட்டு.. சமைக்க தெரியாதவர்கள் கூட அருமையாக இதனை சமைக்கலாம்.. ஈஸி ரெசிபி!
Chicken peratu : சமைக்க தெரியாதவர்கள் கூட அருமையாக இதனை சமைக்கலாம் அவ்வளவு சுவையாக இருக்கும். முக்கியமாக பேச்சிலர்ஸ்க்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். சிக்கன் பெரட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சிக்கன் பெரட்டு
தேவையான பொருட்கள்
இலவங்கப்பட்டை சிறிய துண்டு
ஏலக்காய் 2
கிராம்பு 3
பெருஞ்சீரகம் விதைகள் 1/2 தேக்கரண்டி
பூண்டு 8
இஞ்சி சிறிய துண்டு (2 அங்குலம்)
வெங்காயம் (2)
பச்சை மிளகாய் (2)
மிளகாய் தூள் (1&1/2 தேக்கரண்டி)
மஞ்சள் தூள் (1/2) டீஸ்பூன்,
கொத்தமல்லி தூள் (1 தேக்கரண்டி)
உப்பு (1 தேக்கரண்டி),
சிக்கன் (750 கிராம்)
எலுமிச்சை (1/2)
கறிவேப்பிலை
சிவப்பு மிளகாய் 5
தக்காளி (1)
1/2 தேக்கரண்டி மிளகு தூள்
சிக்கன் பெரட்டு செய்முறை
சமைக்க தெரியாதவர்கள் கூட அருமையாக இதனை சமைக்கலாம் அவ்வளவு சுவையாக இருக்கும். முக்கியமாக பேச்சிலர்ஸ்க்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். சிக்கன் பெரட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாமா.
முதலில் இரண்டு ஏலக்காய் பட்டை, இரண்டு லவங்கம், அரை ஸ்பூன் சோம்பு எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இதனை மிக்ஸியில் அல்லது சிறு உரலிலோ போட்டு நீங்கள் அரைத்துக் கொள்ளலாம். பின்னர் அது பவுடர் பதத்திற்கு வந்தவுடன் அதில் 8 பல் பூண்டு, அதில் பாதி அளவு இஞ்சி எடுத்துக் கொள்ளுங்கள். இதனை நன்கு தட்டி வைத்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் உப்பு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், நாம் தட்டி வைத்த இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு அழுத்தி பிசைய வேண்டும். அதாவது வெங்காயத்தில் இருந்து சாறு வெளியே வரும் அளவிற்கு நன்கு பிசைய வேண்டும்.
இப்போது அதில் நாம் சுத்தம் செய்து வைத்த முக்கால் கிலோ சிக்கனை சேர்த்து எலுமிச்சை சாறை பிழிந்து நன்கு ஐந்திலிருந்து எட்டு நிமிடம் மிக்ஸ் செய்ய வேண்டும். நன்கு அழுத்தம் கொடுத்து பிசைய வேண்டும் அப்பொழுதுதான் அந்த மசாலாக்கள் சிக்கனில் இறங்கும். இதனை ஒரு அரை மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள் நன்கு ஊறிவிடும்.
அரை மணி நேரம் ஆகிய பிறகு ஒரு கடாய் எடுத்துக் கொள்ளுங்கள் அதில் சிறிது என்னை வரமிளகாய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பின்னர் நாம் விசைத்து வைத்த அந்த சிக்கனை எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் மேல் கட் பண்ணி வைத்த தக்காளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு மூடி வைத்து சமயங்கள் சிக்கனில் தண்ணீர் வடியும் என்பதால் தண்ணீர் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது சிக்கன் நன்கு வெந்ததும் அதன் மேல் பெப்பர் பவுடர் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டினால் சிக்கன் பெரட்டு ரெடி.
அவ்வளவுதான் இது பேச்சுலர்ஸ்க்கு மிகவும் ஈஸியான ஒரு ரெசிபி நான் வெஜ் சாப்பிட விரும்புபவர்கள் இதனை ட்ரை பண்ணி பாருங்கள். தினமும் செய்து கூட சாப்பிடுவீர்கள். அந்த அளவிற்கு இந்த ரெசிபி ஈஸியாக செய்யலாம். அதேபோல மிகவும் சுவையாகவும் இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9