தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Prawn Fried Rice: சுவையான இறால் பிரைட் ரைஸ்

Prawn Fried Rice: சுவையான இறால் பிரைட் ரைஸ்

Aarthi V HT Tamil
Jul 27, 2023 10:34 AM IST

இறால் பிரைட் ரைஸ் எப்படி செய்வது என பார்க்கலாம்.

இறால் பிரைட் ரைஸ்
இறால் பிரைட் ரைஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையானவை

சிறிய இறால்கள் - 1/2 கிலோ

வடித்த சாதம் - 2 கப்

முட்டை - 1

மிளகுத் தூள் - ஒரு சிட்டிகை

சோயா சாஸ் - 1/2 ஸ்பூன்

வெங்காயம் - 1

பூண்டு - நான்கு பல்

மீன் சாஸ் - 1 ஸ்பூன்

எண்ணெய் - 2 ஸ்பூன்

கேரட் - 1

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

கொத்தமல்லி தூள் - 2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

  • நடுத்தர அளவிலான பச்சை இறால் அல்லது சிறிய இறால்களைத் தேர்ந்தெடுக்கவும். அவற்றை சுத்தமாக கழுவவும்.
  • கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடான பிறகு, பூண்டு வெட்டி போட்டு வறுக்கவும்.
  • இவற்றை கூட இறால்களைச் சேர்த்து வதக்கவும். தண்ணீர் பிரிந்து வரும் வரை இறாலை வறுக்கவும்.
  • பின்னர் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இறால்கள் முழுமையாக சமைக்கப்பட வேண்டும்.
  • முட்டையை அடித்து சேர்த்து நன்றாக கலக்கவும். நறுக்கிய வெங்காயத் துண்டுகள் மற்றும் கேரட் துண்டுகளை ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
  •  சமைத்த அரிசி, சோயா சாஸ், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பரிமாறும் முன் நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  • அவ்வளவு தான் இறால் ப்ரைடு ரைஸ் ரெடி.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்