Ragi Kozhukkattai: ஹெல்தியான ராகி கொழுக்கட்டை.. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ragi Kozhukkattai: ஹெல்தியான ராகி கொழுக்கட்டை.. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது!

Ragi Kozhukkattai: ஹெல்தியான ராகி கொழுக்கட்டை.. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 17, 2024 12:03 PM IST

பிஸ்கெட், சாக்லேட் என பாக்கெட் உணவுகளை தருவதற்கு பதிலாக இதுபோன்று சத்தான ராகி கொழுக்கட்டையை செய்து தரலாம். ருசி அருமையாக இருக்கும். உடம்புக்கும் வலு ஊட்டக் கூடியது. ராகி கொழுக்கட்டை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க

ராகி கொழுக்கட்டை
ராகி கொழுக்கட்டை

ராகி கொழுக்கட்டை தேவையான பொருட்கள்

ராகிமாவு

அவல்

தேங்காய்

ஏலக்காய்

வெல்லம்

உப்பு

நெய்

முந்திரி பருப்பு

செய்முறை

ஒரு கப் ராகி மாவை எடுத்து கொள்ள வேண்டும். எந்த கப்பில் ராகி அளந்து எடுக்கிறோமோ அதே அளவில் அவல் எடுத்து கொள்ள வேண்டும். அதே கப்பில் தேங்காயையும் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கப் வெல்லத்தையும் எடுத்து கொள்ள வேண்டும். அதில் 4 ஏலக்காய் சேர்த்து கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், அவல், ஏலாக்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். மேலும் வெல்லத்தை நன்றாக தட்டி எடுத்து கொள்ள வேண்டும். வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டி அல்லது கரும்பு சர்க்கரையை சேர்த்து கொள்ளலாம்.

இப்போது ஒரு பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் அரைத்த தேங்காய் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும். இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் 50 கிராம் முந்திரி பருப்பையும் நெய்யில் வறுத்து சேர்த்து கொள்ள வேண்டும். வெல்லத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும். வெல்லத்தில் தூசி இருந்தால் கால் கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி வடித்து சேர்த்து கொள்ளலாம். பாகு கம்பி பதம் வர தேவை இல்லை. இப்போது ராகி, தேங்காய் வெல்லம் அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் அதில் மூடி போட்டு 10 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்

பின்னர் அதை கொழுக்கட்டையாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் ருசியாக ராகி கொழுக்கட்டை ரெடி. இந்த கொழுக்கட்டை குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. 

ராகியின் நன்மைகள்

கேழ்வரகில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. இது குளுக்கோஸ் உறிஞ்சுதலை மெதுவாக்கி,ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கிறது.

ஊட்டச்சத்துகளின் அடர்த்தி

கேழ்வரகு தானியத்தில் வைட்டமின்கள் பி1, பி3, பி6 மற்றும் கால்சியம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் ஒட்டுமொத்த உடல்நல ஆரோக்கியத்துக்கு ஆதரவளிக்கிறது. அத்துடன் நீரழிவு சம்மந்தமான சிக்கல்களை தடுக்கவும் அல்லது நிர்வகிக்கவும் உதவுகிறது.

வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது

இதில் இடம்பிடித்திருக்கும் நார்ச்சத்து பசி உணர்வை அடக்கி வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. உடல் எடையை நன்கு நிர்வகிக்க உதவுகிறது. நீரழிவு பாதிப்பு இருப்பவர்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.