தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Healthy Food : உடலுக்கு ஊட்டசத்தை வழங்க எந்த உணவுக்கு பதில் எதை எடுத்துக்கொண்டால் நல்லது?

Healthy Food : உடலுக்கு ஊட்டசத்தை வழங்க எந்த உணவுக்கு பதில் எதை எடுத்துக்கொண்டால் நல்லது?

Priyadarshini R HT Tamil
Oct 03, 2023 12:00 PM IST

Healthy Food : நீங்கள் தினமும் உண்ணும் உணவு முக்கியத்துவம் வாய்ந்தது. அதுதான் உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்கி, ஆற்றலை அளிக்கிறது. அந்த ஆற்றல்தான் நீங்கள் நாள் முழுவதும் இயங்க உதவுகிறது. எனவே நீங்கள் உட்கொள்ளும் உணவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும்.

Healthy Food : உடலுக்கு ஊட்டசத்தை வழங்க எந்த உணவுக்கு பதில் எதை எடுத்துக்கொண்டால் நல்லது?
Healthy Food : உடலுக்கு ஊட்டசத்தை வழங்க எந்த உணவுக்கு பதில் எதை எடுத்துக்கொண்டால் நல்லது?

ட்ரெண்டிங் செய்திகள்

கஞ்சியுடன் தானியங்கள்

தானியங்களை அப்படியே சாப்பிடுவதைவிட கஞ்சியாக குடியுங்கள். அதில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. இது முழு தானியங்களில் இருந்து செய்யப்படுவதால், இதில் மினரல்களும் உள்ளன. சர்க்கரையும் குறைவாக உள்ளது. நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. கஞ்சிகளில் தானியங்களை கலந்தும் குடிக்கலாம்.

பழச்சாறு

பழச்சாறுகளை எடுத்துக்கெள்வதைவிட பழங்களாக எடுத்துக்கொள்வது நல்லது. அதில் சர்க்கரையும் குறைவாக இருக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து நீங்கள் உண்ணும் உணவை செரிக்க வைக்க உதவுகிறது. நீங்கள் பழங்களை கடித்து, மென்று சாப்பிடும்போது அது உங்கள் தடைகளுக்கு வேலை கொடுப்பதால், வாய்ப்பகுதி நன்றாக இயங்கவும் உதவுகிறது.

கார்ன்

பாப்கார்ன்களுக்கு பதில் வேகவைத்த ஸ்வீட் கார்ன்களை சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றில் கலோரிகளும், ஆரோக்கியமற்ற கொழுப்புகளும் குறைவாக உள்ளது. இது உங்கள் இதயத்துக்கும் நல்லது. சிற்றுண்டிகளுக்கான சிறந்த தேர்வு வேகவைத்த ஸ்வீட் கார்ன்கள். குழந்தைகளுக்கும் செய்துகொடுக்கலாம். ஆனால் அவர்களை அதை நன்றாக மென்று சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு அது உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

பிரவுன் பிரட்

கோதுமையால் தயாரித்த பிரவுன் பிரட்டில் ஆரோக்கியமும், நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. ஆனால் மைதாவில் தயாரிக்கும் வெள்ளை பன்களை உட்கொள்ளாதீர்கள். அவை உடலுக்கு கேடு விளைவிக்கும். இ

தயிர்

ஐஸ்கிரீம்களுக்கு பதில், தயிர் அல்லது யோகர்ட் பயன்படுத்துங்கள். ஐஸ்கிரீமில் அதிகம் சர்க்கரை உள்ளது. அதில் பிரசர்வேட்டிவ்களும் கலந்துள்ளன. தயிர் மற்றும் யோகட்டில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. என தயிர் குறிப்பாக ப்ரோபயோடிக் தயிர் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நன்மை கொடுக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel