தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Mix : வாழ்நாள் முழுவதும் கால்சியம், இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க இந்த ஒரு பொடி போதும்!

Health Mix : வாழ்நாள் முழுவதும் கால்சியம், இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க இந்த ஒரு பொடி போதும்!

Priyadarshini R HT Tamil
Jan 29, 2024 09:25 AM IST

Health Mix : வாழ்நாள் முழுவதும் கால்சியம், இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க இந்த ஒரு பொடி போதும்!

Health Mix : வாழ்நாள் முழுவதும் கால்சியம், இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க இந்த ஒரு பொடி போதும்!
Health Mix : வாழ்நாள் முழுவதும் கால்சியம், இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க இந்த ஒரு பொடி போதும்!

அந்த காலத்தில் வயோதிகர்களுக்கு மட்டுமே இருந்த மூட்டுவலி பிரச்னைகள் இப்போது பரவலாக அதிகமானோருக்கு வருகிறது. மேலும் இளைஞர்களுக்கும் ஏற்படுகிறது. 

இதற்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதுதான் என்று கூறப்படுகிறது. அதனால் மூட்டுவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதற்கு காரணம் கால்சியம் இரும்புச்சத்து குறைபாடுதான்.

இவையனைத்தையும் சரிசெய்யுமளவுக்கு, ஒரு வாரம் தொடர்ந்து இந்தப்பாலை மட்டும் பருகி வாருங்கள்.

தேவையான பொருட்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

ஜவ்வரிசி – 100 கிராம்

ஜவ்வரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. இதில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் இடுப்பு வலி ஏற்படாமல் இருக்க உதவுகிறது. 

மேலும் கை-கால் வலி, மூட்டு வலி மற்றும் கழுத்து வலி பிரச்னைகள் இருக்காது. இதை ஆண்கள், பெண்கள் என யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

ஜவ்வரிசியை குறைவான தீயில் நன்றாக வறுக்க வேண்டும். இதை வறுக்கும்போது, இதன் நிறம் மாறாது, ஆனால் பொரிந்து அதிகம் உள்ளதுபோல் வரும். 100 கிராம் சேர்த்தால், அதைவிட அதிகளவு இருப்பதுபோல் இருக்கும்.

கருப்பு எள் – 100 கிராம்

இதையும் வறுக்க வேண்டும். எள் வெடிக்கும் எனவே இதை மூடி வைத்து வறுக்க வேண்டும். தீயை முற்றிலும் குறைத்துவிடவேண்டும். எள் பொரிந்தவுடன் நல்ல மணம் வரும். எள்ளில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. 

இதை பூப்பெய்திய பெண்கள் எடுத்துக்கொள்வது அவர்களின் மாதவிடாய் ஆரோக்கியத்துக்கு நல்லது. கர்பப்பைப்க்கு வலு சேர்க்கும். மேலும் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். 

இடுப்பு வலி, கை-கால் வலியையும் சரிசெய்யும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல சுறுசுறுப்படையும்.

கருப்பு உளுந்து – 200 கிராம்

எப்போதும் தோல் உளுந்தையே பயன்படுத்த வேண்டும். எலும்பு எவ்வளவு தேய்ந்திருந்தாலும் அதை சரிசெய்யும். இடுப்புக்கு வலு சேர்க்கும். கை-கால் வலியை சரிசெய்யும். 

மிதமான தீயில் இதையும் வறுக்க வேண்டும். பெண்கள் பூப்பெய்ந்தும்போது உளுந்தில் களி செய்துகொடுப்பது வழக்கம் அல்லது உளுந்து லட்டு மற்றும் நாட்டுக்கோழியுடன் சேர்த்து கொடுப்பது, பெண்களின் இடுப்பு எலும்புகள் வலுப்பெற உதவும். 

இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் இடுப்பு வலி மற்றும் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் ஏற்படாது. உளுந்தை பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

பார்லி

எலும்பு தேய்மானத்தை சரிசெய்யும். எலும்புக்கு வலு கொடுக்கும். அதிகளவில் சுண்ணாம்பு சத்து உள்ளது. உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும். அந்த நாளுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். இதை 3 நிமிடம் மட்டுமே வறுத்து எடுக்க வேண்டும்.

ஏலக்காய்

ஏலக்காய் வாசனைக்காக சேர்க்கப்படுகிறது. இதை தினமும் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. செரிமானத்தை அதிகரிக்கும்.

இவையனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக ஆறவிடவேண்டும். பின்னர் ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனுடன் சுக்குப்பொடி சேர்க்க வேண்டும். உளுந்து சேர்ப்பதால் வாயுத்தொல்லையை சரிசெய்ய சுக்கு உதவும். தினமும் சிறிது சுக்கு எடுத்துக்கொள்ளும்போது, உடலில் ஏற்படும் சோர்வை போக்கும். அழற்சி மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. செரிமான கோளாறுகளையும் சரிசெய்கிறது.

இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்த முடியும்.

செய்முறை

இதை ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவேண்டும். இதை நேரடியாக சேர்த்தால் கட்டிப்படும் என்பதால் இதை முதலில் தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு டம்ளர் பாலை கொதிக்க வைத்து, அதில் இதை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இரண்டும் நன்றாக கொதிக்க வேண்டும். கொஞ்சம் கெட்டியாகி வரும்போது எடுத்து நாட்டுச்சர்க்கரை கலந்து பருகலாம்.

பாலில் சேர்த்து குடிக்க விரும்பாதவர்கள் தண்ணீரிலும் சேர்த்து இதேபோல் செய்து பருகலாம். ஆனால் பாலுடன் சேர்த்து பருகும்போதுதான் இதன் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.

வெள்ளை சர்க்கரை தவிர, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு என எதுவேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதை காலை – மாலை, காபி, டீக்கு பதில் எடுத்துக்கொள்ளலாம். இதை வழக்கமாக எடுத்துக்கொண்டால், கை-கால் வலி, இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற பிரச்னைகள் இருக்காது. உடல் சோர்வு இருக்காது. சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்காது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இது மிகவும் நல்லது.