கோடைக்காலத்தில் தசைப்பிடிப்பைத் தடுக்கும் எளிய கைவைத்தியம்
நட்ட நடுஇரவு நேரங்களில் திடீரென ஏற்படும் கால் தசைப்பிடிப்பால் மிகவும் அவதி ஏற்படும். இதுபோன்ற சமயங்களில் தசைப்பிடிப்பில் இருந்து விடுபட இந்த வழிமுறையைக் கையாண்டு பாருங்கள். சட்டென்று நிவாரணம் கிடைக்கும்.

உஷ்ணமான காலநிலையில் உடம்பில் உள்ள நீர்ச்சத்தானது குறைந்துபோகும். இதனால் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாகும்.
கோடைக்காலத்தில் தசைப்பிடிப்பு ஏற்படுவது சகஜம். உடலில் நீர்ச்சத்து குறைவதால் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு இதுபோன்ற தொந்தரவு உண்டாகும். இது தானாகவே சில நிமிடங்களில் சரியாகிவிடும் என்றபோதிலும் அடிக்கடி இதுபோன்று தசைப்பிடிப்பு ஏற்பட்டால் அதை அசட்டையைாக விட்டுவிடாமல் உரிய மருத்துவத்தை செய்ய வேண்டும்.
தசைப்பிடிப்பு ஏற்படுவதற்கு உடலில் நீர்ச்சத்து குறைவதால் நிகழும் என்றாலும் அதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஊட்டச்சத்து குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம்.
தசைகளை தளர்வாக்குவதற்கு மெதுவாக மசாஜ் செய்துவிடலாம்.
அதேபோல தசைப்பிடிப்பு ஏற்பட்ட காலின் குதிகாலை தரையில் ஊன்றி கால்களை விரைப்பாக நீட்டினால் தசைகள் தளர்வடையும். வலியும் குறையத் தொடங்கும்.
பாதிக்கப்பட்ட பகுதியில் இளஞ்சூட்டில் ஹீட்டிங் பேடை வைத்து ஒத்தடம் அளிக்கலாம்.
கைவத்தியமாக இரண்டு பானங்களைத் தயாரித்து அருந்தினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்
1. எலுமிச்சை சாறு + உப்பு + தண்ணீர்
எலுமிச்சை சாறை அருந்துவதால் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கிடைக்கும். சாறுடன் பிங்க் உப்பு அல்லது பாறை உப்பை கலந்து குடிக்க வேண்டும். பிங்க் உப்பில் ஏராளமான பொட்டாசியம், சல்பர், மெக்னீசியம், சோடியம் போன்ற தாதுச்சத்து நிறைந்துள்ளது. இது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமாகும்.
2. இளநீர்
உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்டுகள் இளநீரில் அதிக அளவில் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இளநீர் குடித்தால் காலில் தசைப்பிடிப்பு ஏற்படாது என்றும் தெரிவிக்கின்றனர்.
