தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Olive Oil Massage Benefits: பிள்ளைபேறு, மூட்டு வலி..! தொப்புளில் ஆலிவ் எண்ணெய் மசாஜ் செய்தால் இத்தனை நன்மைகளா?

Olive Oil Massage Benefits: பிள்ளைபேறு, மூட்டு வலி..! தொப்புளில் ஆலிவ் எண்ணெய் மசாஜ் செய்தால் இத்தனை நன்மைகளா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 20, 2024 04:30 PM IST

ஆலிவ் எண்ணெய்யை வயிறு, தொப்புள் பகுதிகளில் சிறிது அளவு ஊற்றி மெல்லிய மசாஜ் செய்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என ஆயுத்வேதத்தில் கூறப்படுகிறது.

தொப்புளில் ஆலிவ் ஆயில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் இதோ
தொப்புளில் ஆலிவ் ஆயில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் இதோ

ட்ரெண்டிங் செய்திகள்

பொதுவாக உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் பல்வேறு சிகிச்சை பலன்களை பெறலாம். அந்த வகையில் தொப்புள் மற்றும் அதை சுற்றியிருக்கும் வயிற்று பகுதியில் சிறிதளவு எண்ணெய் ஊற்ரி மசாஜ் செய்தவதால் உடல் ஆரோக்கியத்துக்கு பல வகைகளில் நன்மை தருவதாக ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது. ஏனென்றால் தொப்புள் பகுதி நமது உடலின் ஆற்றல் மற்றும் மைய புள்ளியாக இருப்பதால், உடலின் செயல்பாடுகள் அனைத்தயும் அது கட்டுப்படுத்துகிறது.

அந்த வகையில் ஆலிவ் எண்ணெய்யை தொப்புள் பகுதியில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மையை பார்க்கலாம்.

கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும்

வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து தொப்புளில் தடவுவதன் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை மேம்படுத்துகிறது. பெண்களின் கருவுறுதலை அதிகரிக்கவும், இனப்பெருக்க அமைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.

மாதவிலக்கு வலியை குறைத்தல்

கருப்பை சுவரை சுற்றியுள்ள நரம்புகளைத் தளர்த்துவதன் மூலம் பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது.

தொற்று பாதிப்பை குறைத்தல்

தொப்புள் பகுதியானது ஆழமாகவும், ஈரப்பதத்துடன், கருமையாகவும் இருப்பதால், இது ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாக்களுக்கு இனப்பெருக்கம் செய்வதற்கு சாதகமாக அமைகிறது. ஆலிவ் எண்ணெயில் பூஞ்சை, பாக்டீரியா எதிர்ப்பு தன்மையும், கிருமி நாசினி பண்புகள் இருப்பதால் தொப்புள் பகுதி தொற்றுகளுக்கு சிகிச்சையளிகிறது. அத்துடன் அந்த பகுதியை சுத்தமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

சரும அமைப்பை மேம்படுத்துதல்

ஆலிவ் எண்ணெயில் இடம்பிடித்திருக்கும் இயற்கையான கொழுப்பு அமிலங்கள், சருமத்தில் இருக்கும் நிறமியை அழிக்கவும், அதிகப்படியான வறட்சியைத் தடுக்கவும், சருமத்தின் அமைப்பை மேம்படுத்தவும் செய்கிறது. உச்சந்தலை முதல் உடல் முழுவதும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவுகிறது. உதடுகள், குதிகால், கால்விரல் மற்றும் சருமம் இயற்கையான பிரகாசத்தை அடைய உதவுகிறது

வயிறு கோளாறுகளை குணப்படுத்துதல்

வயிறு வலி காரணமாக அவதிக்குள்ளாகினால் உடனடி நிவாரணத்துக்கு சிறிது ஆலிவ் எண்ணெயை தொப்புளில் தடவலாம். தொப்புள் மற்றும் வயிற்று பகுதியை செய்வதன் மூலம் எரிச்சலூட்டும் குடல் இயக்கம், மலச்சிக்கல், வீக்கம், அஜீரணம், குமட்டல் மற்றும் வயிற்று வலி போன்றவற்றுக்கு தீர்வளிக்கும்

உடல் கறைகளை போக்குதல்

ரத்தத்தை சுத்தப்படுத்துவதன் மூலம் உடலில் உள்ள கறைகளை அகற்ற உதவுகிறது. முகப்பருவால் ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.

தலைமுடி ஆரோக்கியத்துக்கு நன்மை

தொப்புளில் ஆலிவ் எண்ணெயை தடவுவதன் மூலம், வறண்ட உச்சந்தலையில் வறட்சி ஏற்படுவது தவிர்க்கபடுகிறது. உங்கள் தலைமுடிக்கு பொலிவையும் சேர்க்கிறது.

மூட்டு வலிக்கு நிவாரணம்

உங்கள் தொப்புளில் ஆலிவ் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள நரம்புகள், திசுக்கள், தசைகள் மற்றும் மூட்டுகள் தூண்டப்படுகின்றன. மூட்டு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மூட்டுகள் மற்றும் கால்களை மசாஜ் செய்வதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்