தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Diabetic Care Just One Spoon Daily Is Enough Forget The Worry About Diabetes Completely

Diabetic Care : தினமும் ஒரு ஸ்பூன் இது மட்டும் போதும்! சர்க்கரை நோய் குறித்த கவலையை முற்றிலும் மறந்திருங்க!

Priyadarshini R HT Tamil
Feb 23, 2024 12:11 PM IST

Diabetic Care : தினமும் ஒரு ஸ்பூன் இது மட்டும் போதும்! சர்க்கரை நோய் குறித்த கவலையை முற்றிலும் மறந்திருங்க!

Diabetic Care : தினமும் ஒரு ஸ்பூன் இது மட்டும் போதும்! சர்க்கரை நோய் குறித்த கவலையை முற்றிலும் மறந்திருங்க!
Diabetic Care : தினமும் ஒரு ஸ்பூன் இது மட்டும் போதும்! சர்க்கரை நோய் குறித்த கவலையை முற்றிலும் மறந்திருங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

ஒருவர் சாப்பிடடுவதற்கு முன் 60 முதல் 110 மி.கி அளவு இருக்கவேண்டும். அது சாப்பிட்ட பின்னர் 80 முதல் 140 மில்லி கிராம் அளவு இருக்க வேண்டும். சாப்பிட்டபின் 140ஐ கடந்தாலே போதும், குறிப்பாக 180 கிராம் இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று பொருள். 240, 340 ஆகிய அளவுகள் என்பது மிக அதிக அளவு என்று பொருள்.

சர்க்கரை நோயை நாம் முழுமையாக குணப்படுத்த முடியாது. ஏனெனில் சர்க்கரை நமது உடலுக்கு தேவையான ஒன்று. அது உடலில் குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். அது அதிகரிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். அதிகரிக்கவிடாமல் இருக்க நாம் இந்தப்பொடியை உபயோகிக்க வேண்டும்.

இதை தினமும் பயன்படுத்தலாம். நல்ல பலன்களை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்

எவர் சில்வர் அல்லது கண்ணாடி கண்டெய்னர் – 1

(காய்ந்து இருக்க வேண்டும்)

நாவல் கொட்டை பொடி – 50 கிராம்

(இங்கு கொடுக்கப்படும் அனைத்து பொடிகளும், நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் அல்லது ஆர்கானிக் கடைகளிலும் வாங்கிக்கொள்ளலாம். இதன் விலை மிகவும் குறைவுதான். 30 முதல் 40 ரூபாய்க்குள் இருக்கும். எனவே இதை பொடிகளாவும் வாங்கி பயன்படுத்தலாம் அல்லது வீட்டிலேயே தேவையானவற்றை வாங்கி காய வைத்து, அரைத்தும் பயன்படுத்தலாம்)

சிறுகுறிஞ்சான் பொடி – 50 கிராம்

(ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை எளிதாக கட்டுப்படுத்துகிறது)

ஆவாரம் பூ பொடி – 50 கிராம்

(தங்கப்புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதுடன், உடலை இளமை தோற்றத்துடன் வைக்க உதவும்)

நெல்லிக்காய்ப் பொடி – 50 கிராம்

(மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்தது)

வெந்தயம் – 50 கிராம்

(சர்க்கரை வியாதிக்காரர்கள் அதிகம் எடுத்துக்கொள்வது அவசியம். உடலுக்கும் நல்லது)

இந்த அனைத்து பொடிகளையும் அந்த கண்டெய்னரில் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

இதை வெளியில் வைத்துக்கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாது. அதை கடந்தால் பூச்சிகள் வரும். எனவே அவ்வப்போது புதிதாக செய்துகொள்வது நல்லது.

இவற்றை ஒரு பெரிய கண்டெய்னரில் அடைத்து வைத்துக்கொண்டு, ஒரு சிறிய பாட்டிலில் அன்றாட பயன்பாட்டுக்கும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் இந்த மொத்த கலவையை அடிக்கடி திறந்து மூடினால், அதில் உள்ள மருத்துவ குணங்கள் குறைந்துவிடும். எனவே சிறிது, சிறிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தப்பொடியை பயன்படுத்தும் முறை

ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து ஒரு டம்ளர் மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.

காபி, டீ காலையில் பருகும் பழக்கம் உள்ளவர்கள் கட்டாயம் அதை முற்றிலும் தடுக்க வேண்டும்.

(அந்த ஒரு ஸ்பூன் பவுடரை தனியாக சின்ன கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிது சுடு தண்ணீர் ஊற்றி கரைத்து, பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்தால், இந்தப்பொடி தண்ணீரில் கட்டியில்லாமல் இருக்கும்)

இதை குடித்துவிட்டு, கட்டாயம் அரை மணி நேரம் வரை நடக்க வேண்டும். இது உங்கள் உடலில் சர்க்கரை அளவை மிதமானதாக்கும். சர்க்கரை ஒரு நோய் கிடையாது. நமது உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் ஒரு குறைபாடு ஆகும். எனவே அதை சரிசெய்ய இதுபோன்ற எளிய வழிகளை கடைபிடித்தாலே போதும். உங்கள் உடலில் சர்க்கரை நோய் குறையும். கட்டாயம் செய்து பலன் பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்