தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Women Health: பிரசவித்த பெண்களுக்கு கறிவேப்பிலைக் குழம்பு செய்வது எப்படி?

Women Health: பிரசவித்த பெண்களுக்கு கறிவேப்பிலைக் குழம்பு செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil
Jan 26, 2023 01:00 PM IST

பிரசவித்த பெண்களுக்கு கறிவேப்பிலைக் குழம்பு செய்வது எப்படி? என்பது பற்றி இங்கு காணலாம்.

கறிவேப்பிலைக் குழம்பு
கறிவேப்பிலைக் குழம்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால், உணவு மணமாக சுவையாக இருக்கும். கறிவேப்பிலை இலைகளே அதிக மருத்துவப் பயன் கொண்டவை.

இலேசான காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. மருந்தாகச் சாப்பிட்டு வர, பசியை அதிகமாக்கும்,

உடலை வலுவாக்கும், குடல் வாயுவை வெளியேற்றும்.

இது பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் பத்தியக் குழம்பு. அவர்கள் சாப்பிட்ட உணவை சீக்கிரம் ஜீரணிக்க உதவும். உடல் அசதியைப் போக்கும்.

சரி இனி கறிவேப்பிலைக் கொண்டு பிரசவித்த பெண்களுக்கு கறிவேப்பிலைக் குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை – கைப்பிடி அளவு,

கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்,

மிளகு 10,

காய்ந்த மிளகாய் – 2,

உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்,

துவரம் பருப்பு – ஒரு டீஸ்பூன்,

புளி – ஒரு நெல்லிக் காய் அளவு,

சீரகம் – ஒரு டீஸ்பூன்,

கடுகு – அரை டீஸ்பூன்,

நல்லெண்ணெய் – 100 மில்லி,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… மிளகு, கடலைப் பருப்பு, சீரகம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய வற்றை வறுத்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை தனியாக வதக்கவும். பிறகு, எல்லாவ ற்றையும் ஒன்றாகக் கலந்து, புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் கலந்து கொள்ளவும்.

மீதமிருக்கும் எண்ணெயை கடாயில் விட்டு… கடுகு தாளித்து, அரைத்து வைத் திருக்கும் கலவையைப் போட்டுக் கொதிக்க விட்டு இறக்கவும்.

இப்போது சுவையான கறிவேப்பிலைக் குழம்பு ரெடி.

WhatsApp channel

டாபிக்ஸ்