Chicken Vadai : சிக்கன்ல வடை செய்ய முடியுமா? வாவ் நல்லா இருக்கே! ரெசிபி இதோ!
Chicken Vadai : சிக்கன்ல வடை செய்ய முடியுமா? வாவ் நல்லா இருக்கே. ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 300 கிராம்
கடலை பருப்பு – அரை கப்
இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
சோம்பு – அரை ஸ்பூன்
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கடலை பரப்பை ஒரு பாத்திரத்தில் தனியாக ஊறவைக்க வேண்டும்.
முதலில் சிக்கனை வேக வைக்க வேண்டும். ஒரு குக்கரில் சிக்கன் துண்டுகள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிக்கன் வெந்தவுடன் சிறிது நேரம் ஆறவிட்டு, எலும்புகளை நீக்கவேண்டும். பின்னர் சிக்கன் துண்டுகளை சிறிது சிறிதாக கையால் உதிர்க்க வேண்டும்
அடுதது, ஒன்றரை மணி நேரம் ஊறிய கடலை பருப்பு, உதிர்த்த சிக்கன் துண்டுகள், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு, தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இது 80 சதவீதம் அரைத்திருக்க வேண்டும். அரைத்த மாவுடன் சிறிது கடலை பருப்பை சேர்த்து வடை மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின்னர், தட்டிய வடையை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும். சூடான சுவையான சிக்கன் வடை தயார். இதற்கு சட்னிகள், சாஸ் என எதுவேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.
டாபிக்ஸ்