தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beans Poriyal: பீன்ஸ் பொரியல் இப்படி செஞ்சு பாருங்க.. காரக்குழம்புக்கு சரியான காமினேஷன்

Beans Poriyal: பீன்ஸ் பொரியல் இப்படி செஞ்சு பாருங்க.. காரக்குழம்புக்கு சரியான காமினேஷன்

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 21, 2023 11:19 AM IST

புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் பீன்ஸில் அதிகம் உள்ளது. இந்த பீன்ஸ் வைத்து ருசியான பொரியல் செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.

பீன்ஸ் பொரியல்
பீன்ஸ் பொரியல்

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

பீன்ஸ்

எண்ணெய்

சீரகம்

கடுகு உளுந்து

கடலைபருப்பு

மிளகாய் வத்தல்

வெங்காயம்

மஞ்சள் தூள்

உப்பு

கறிவேப்பிலை

தேங்காய் துருவல்

செய்முறை

அரை கிலோ பீன்ஸ் ஐ நன்றாக கழுவி தேவையான அளவில் நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். 100 கிராம் சின்ன வெங்காயத்தையும் நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு சூடான கடாயில் 3 ஸ்பூன் வரை எண்ணெய் விட்டு அதில் ஒரு ஸ்பூன் கடலை பருப்பை சேர்த்து வறுக்க வேண்டும். கடலை பருப்பு சிவந்து வரும் போது அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கடுகு உளுந்தை சேர்த்து பொரிய விட வேண்டும். அதில் இரண்டு மிளகாய் வத்தலை சேர்க்க வேண்டும். பின்னர் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் சிவந்து வரும் போது இரண்டு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும். அதில் ஒரு பீன்சை நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் கொஞ்சமாக மஞ்சள் துள் சேர்த்து கொள்ளலாம். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். பீன்ஸ் வெந்த பிறகு தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் சுண்டி வரும்போது விருப்பத்திற்கு ஏற்ப தேங்காய் துருவலை சேர்த்து கொள்ள வேண்டும். தேங்காய் அதிகம் சேர்த்தால் ருசி நன்றாக இருக்கும்

 இந்த பீன்ஸ் பொரியல் பூண்டு குழம்பு, காரக்குழம்பு போன்றவற்றிற்கு அசத்தலான காமினேஷன். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்