தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Caramel Banana Pan Cake : பான் கேக் பிரியர்களுக்கு 2 இன் 1 ரெசிபி; ப்ரேக்பாஸ்ட், ஸ்னாக்ஸ் இரண்டுக்கும் செய்யலாம்

Caramel Banana Pan Cake : பான் கேக் பிரியர்களுக்கு 2 இன் 1 ரெசிபி; ப்ரேக்பாஸ்ட், ஸ்னாக்ஸ் இரண்டுக்கும் செய்யலாம்

Priyadarshini R HT Tamil
Jun 28, 2023 11:10 AM IST

Caramel Banana Pan Cake : கேரமல் பான் கேக்குகளை யாருக்கெல்லாம் பிடிக்காது? நீங்களும் பான் கேக் விரும்பியாக இருந்தால், இதோ நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் இந்த கேரமல் பான் கேக்கை செய்து மகிழுங்கள்.

கேரமல் பனானா பான் கேக்
கேரமல் பனானா பான் கேக்

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் கேரமலை சேர்த்தால் சாப்பிடுவதற்கு இன்னும் அதிக சுவையை கொடுப்பாதக இருக்கும். உங்களுக்கு கேரமல் பேன் கேக் வேண்டுமெனில் கேரமலை தனியாக தயார் செய்துகொள்ள வேண்டும். இந்த ஒரு பேன் கேக் ரெசிபியை நீங்கள் கற்றுக்கொண்டால் போதும், நீங்கள் நிறைய பேன் கேக்குகளை செய்ய துவங்கிவிடுவீர்கள்.

இதில் முட்டை, மாவு, பால், வாழைப்பழம் ஆகியவை அடங்கியுள்ளது. இது ஒரு முழு உணவாக அமையும். எனவே நீங்கள் இதை ப்ரேக்பாஸ்ட் அல்லது ஸ்னாக்ஸ் இரண்டுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். நீண்ட நேரம் பசியை கட்டும் ஒன்றாகவும் இருக்கும். 

இதை நீங்கள் பழங்களுடன் சேர்த்து சாப்படலாம். அல்லது கேரமல் சாஸ்களையும் வைத்துக்கொண்டு சாப்பிடலாம். மேப்பிள் சிரப் அல்லது சாக்லேட் சாஸ் கூட இதற்கு பொருத்தமான ஒன்றுதான்.

தேவையான பொருட்கள்

முட்டை - 2

பால் - அரை கப்

மைதா மாவு/கோதுமை மாவு - 1 கப்

சர்க்கரை - 4 ஸ்பூன்

வெண்ணிலா எசன்ஸ் - அரை ஸ்பூன்

வாழைப்பழம் - ஒன்று

எண்ணெய் - 1 ஸ்பூன்

கால் ஸ்பூன் உப்பு

முதலில், ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சர்க்கரை மறுறும் உப்பு சேர்த்து அனைத்தும் நன்றாக கலக்கும் வரை அடிக்க வேண்டும்.

பேன் கேக் மாவு தயாரிக்க பால், மைதா அல்லது கோதுமை மாவு, வெண்ணிலா எசன்ஸ் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும். தோசை பதம் அளவுக்கு கரைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும் சர்க்கரை உருகி பாகுபோல் உருவாகும், அதன் மேல் வாழைப்பழ துண்டுகளை அடுக்கி, அதன் மீது மாவை எடுத்து சரியாக வாழைப்பழ துண்டுகள் மூடும் அளவுக்கு பரப்பி விடவேண்டும். அதை சுற்றி எண்ணெயை ஊற்ற வேண்டும்.

ஒருபுறத்தில் பொன்னிறமாக வெந்த பின் மறுபுறத்திற்கு திருப்பிப்போட்டு, இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது இதை நீங்கள் மேலே மேப்பிள் சிரப் அல்லது கேரமல் சாஸ் ஊற்றி பழங்களுடன் சேர்த்து பரிமாறலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்