Massage Therapy: அடேங்கப்பா.. இது இவ்வளவு விஷயம் இருக்கா?.. மசாஜ் செய்வதால் கிடைக்கும் அதிரிபுதிரி பயன்கள்!
மசாஜ் செய்வதின் மூலமாக நமக்கு மன அழுத்தம் குறைகிறது இந்த மன அழுத்தம் குறையும் பொழுது, நமது கவலைகள் நீங்குகிறது. மனச்சோர்வு குறைகிறது.

மசாஜ் சிகிச்சை செய்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. மசாஜ் செய்வதால் உடலில் இருக்கக்கூடிய நாள்பட்ட வலியானது குறைகிறது.
மசாஜ் செய்வதின் மூலமாக நமக்கு மன அழுத்தம் குறைகிறது இந்த மன அழுத்தம் குறையும் பொழுது, நமது கவலைகள் நீங்குகிறது. மனச்சோர்வு குறைகிறது.
ஜீரண மண்டலம் தூண்டப்பட்டு, செரிமானம் ஒழுங்காக நடக்கிறது. தசைச்சார்ந்த இறுக்கம் நன்றாக குறைகிறது. தலைவலி குறைகிறது.
தூக்கமின்மை பிரச்சனை குறைகிறது. நரம்பு சார்ந்த வலிகள் குறைகிறது. அறுவை சிகிச்சை செய்தவர்கள் தங்களது தசைகளை வலுவூட்டுவதற்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் செய்வது கூட ஒரு வகையான மசாஜ்தான்.
மசாஜ் செய்வதால், ரத்த ஓட்டம் சீராக நடக்கிறது. மூட்டு வீக்கம் குறைகிறது. நம் உடலின் நெகிழ்வு தன்மையானது மேம்பட்ட நிலையை அடைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை இந்த மசாஜ் அதிகரிக்கிறது. ரத்த அழுத்தமும் இந்த மசாஜ் தெரபியால் குறைகிறது.
முகத்தில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் பயன்கள்
பலர் தங்கள் முகத்தை தவறாமல் மசாஜ் செய்கிறார்கள். சிலர் மசாஜ் செய்தாலும் அதன் பலன்கள் தெரியாது.ஆனால் இந்த மாதிரியான வழக்கமான முக மசாஜ் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
தினமும் முக மசாஜ் செய்வதால் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். அதிக டென்ஷன் உள்ளவர்கள் முக மசாஜ் செய்ய வேண்டும்.
முக மசாஜ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். தலைவலியை போக்குகிறது.
மாதத்திற்கு ஒரு முறையாவது உங்கள் முகத்தை மசாஜ் செய்வது உங்கள் முகத்தை நச்சுத்தன்மை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.முகப்பரு வராமல் தடுக்கும்.
முகத்தில் பிரச்சனை உள்ளவர்களுக்கு முக மசாஜ் மிகவும் முக்கியமானது. இது ஒற்றைத் தலைவலி சிகிச்சையிலும் உதவுகிறது.
முகத்தை மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தலாம். இது கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. இது சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
