தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Karungali Maalai : பிரபலமாகும் கருங்காலி மாலை! யார் அணிய வேண்டும்? அதை அணிவதால் என்ன கிடைக்கிறது?

Benefits of Karungali Maalai : பிரபலமாகும் கருங்காலி மாலை! யார் அணிய வேண்டும்? அதை அணிவதால் என்ன கிடைக்கிறது?

Priyadarshini R HT Tamil
May 27, 2024 06:57 AM IST

Benefits of Karungali Maalai : பிரபலமாகும் கருங்காலி மாலையை யார், எப்படி அணிய வேண்டும்? அதை அணிவதால் நமது உடலுக்கும், மனதுக்கும் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Karungali Maalai : பிரபலமாகும் கருங்காலி மாலை! யார் அணிய வேண்டும்? அதை அணிவதால் என்ன கிடைக்கிறது?
Benefits of Karungali Maalai : பிரபலமாகும் கருங்காலி மாலை! யார் அணிய வேண்டும்? அதை அணிவதால் என்ன கிடைக்கிறது?

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். 

மேலும் நீங்கள் வெளிப்புறத்தில் பயன்படுத்தும் சில பொருட்களும் உங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு உதவும். அவற்றையும் நீங்கள் செய்தால் உங்களுக்கு பலன்கிட்டும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

கருங்காலி மாலையை அணியும் முன் என்ன செய்யவேண்டும்? 

கருங்காலி மாலையை அணிவதற்கு முன் அதை வைத்து ஒரு மண்டலம் பூஜை செய்யவேண்டும். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதற்கு தகுந்த மந்திரத்தை தினமும் காலை, மாலை என இருவேளையும் பூஜிக்கவேண்டும்.

உங்களுக்கு பொருள் வேண்டும் என்றால் அதற்கு உகந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கு கல்வி வேண்டுமென்றால் அதற்கு உகந்த மந்திரத்தையும், ஆரோக்கியம் வேண்டுமென்றால் அதற்கான மந்திரத்தையும் உச்சரிக்கவேண்டும்.

அந்த மாலையை இறைவனின் முன்னிலையில் வைத்து, உங்களுக்கு என்ன தேவை என்பதை அதில் பதிய வைக்கவேண்டும். பின்னர் அதற்கு தீப ஆராதனை காட்டவேண்டும். என்ன கேட்கிறீர்களோ அதை திடமாக வைக்கக்கூடிய சக்தி கருங்காலி மாலைக்கு உண்டு.

கருங்காலி ஒரு திடமான மரம். நீங்கள் என்ன மந்திரத்தை உச்சரிக்கிறீர்களோ, அதை பதிந்து வைத்துக்கொண்டு, நீங்கள் அணியும்போது குறிப்பிட்ட இலக்கை அடையும் வரை உங்கள் எண்ணங்களை அது சார்ந்து வைத்திருக்கும். இப்படித்தான் கருங்காலி மாலையை பயன்படுத்த வேண்டும் அல்லது சிலர் கருங்காலி மாலையை உங்களுக்கு தேவையான வகையில் உருவேற்றி தருவார்கள்.

எப்படி அணிய வேண்டும்? 

அதற்கு தகுந்தார்போல் நீங்கள் பயன்படுத்த வேண்டும். அந்த மாலையுடன் சேர்த்து வெள்ளெருக்கு மணி, துளசி மணி, உருதிராட்சமோ அல்லது சந்தன மணி என உங்களுக்கு தேவையான மற்றொரு மணியை இணைத்து நீங்கள் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும்போது உங்களுக்கு முழு பலனைத்தரும்.

ஆரோக்கிய நன்மைகள் என்ன?

மருத்துவ ரீதியாக உடலில் உள்ள பல்வேறு பாகங்களுக்கும் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடிய சக்தி கருங்காலி மாலைக்கு உண்டு. எனவே தான் கருங்காலி மாலையை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்