தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Karunkali Maalai: கருங்காலி மாலை அணிந்தால் ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும்.. பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்!

Karunkali Maalai: கருங்காலி மாலை அணிந்தால் ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும்.. பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்!

Divya Sekar HT Tamil
Apr 20, 2024 01:02 PM IST

கருங்காலி இந்த மரம் மிகவும் அற்புத சக்தி படைத்தது. மருத்துவ பலன்கள் அதிகமாக இருக்கிறது. இந்த மரத்தினால் ஆன மாலையை அணிவது நல்ல பலனை கொடுக்கும் என சாஸ்திரங்கள் கூறுகிறது.

கருங்காலி மாலை
கருங்காலி மாலை

கருங்காலி மரத்துக்கு எதிர்மறை சக்தியை அழிக்கும் ஆற்றல் உள்ளது, அதன் காரணமாக இந்த மரத்தில் சிற்பங்கள், பொம்மைகள் செய்து வீட்டில் வைக்கும் பழக்கமும் இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு இந்த மரத்தால் ஆனா கட்டையில் தான் மரப்பாச்சி பொம்மைகள் செய்து கொடுத்தால் தீய சக்திகள் அண்டாமல் இருக்கவும், அவர்களுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கவும் உதவுகிறது.

கருங்காலி இந்த மரம் மிகவும் அற்புத சக்தி படைத்தது. மருத்துவ பலன்கள் அதிகமாக இருக்கிறது. இந்த மரத்தினால் ஆன மாலையை அணிவது நல்ல பலனை கொடுக்கும் என சாஸ்திரங்கள் கூறுகிறது.

கருங்காலி மரம் என்றாலே அதிகப்படியான கதிர்வீச்சுகளை தன்னுள் ஈர்த்துக் கொள்ளும். கருங்காலி மரத்திற்கு அப்படி ஒரு தெய்வீக சக்தி நிறைந்துள்ளது என சொல்லப்படுகிறது.

இந்த கருங்காலி மரத்திலால் செய்யப்பட்ட மாலையை நாம் அணிவதன் மூலம் அற்புதமான பலன்களும் சக்தியும் நமக்கு கிடைக்குமா. இந்த கருங்காலி மரம் நவகிரகங்களின் செவ்வாய் கிரகத்திற்கு உகந்த மரமாக சொல்லப்படுகிறது.

அதேபோல செவ்வாய் பகவான் உச்சத்தில் இருக்கும் பொழுது எப்படி நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கிறாரோ அதே போல தான் இந்த மாளிகை அணிவதன் மூலம் அந்த பலன்கள் நம்மை வந்து அடையும் என சொல்லப்படுகிறது.

செவ்வாய் தோஷம் இருந்து திருமணம் நடக்காமல் தடை ஏற்பட்டு கொண்டு இருந்தால் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் அந்த தோஷம் நிவர்த்தி அடைந்து திருமணம் கைகூடும் என சொல்லப்படுகிறது.

இந்த கருங்காலி மாலையை அணிவதன் மூலம் நம் உடம்பில் இருக்கும் சோம்பலை நீக்கி நம்மளை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும். உடலை வலிமையாகவும் உறுதியாகவும் ஆக்குமாம். உங்களுக்கு கோபம் இருந்தால் அதை படிப்படியாக குறைத்து உங்களை சாந்தப்படுத்துமாம்.

கருங்காலி மாலை பயத்தை போக்க கூடியதாம். உங்களுடைய பேச்சுத் திறனை அதிகரிக்கும். அதாவது சரியான நேரத்தில் சரியான கருத்தை கூறி நல்ல பலன்களை பெரும் அளவிற்கு உங்களுக்கு பேச்சுத் திறனை இந்த கருங்காலி மாலை கொடுக்குமாம்.

நீங்கள் ஏதாவது தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் அந்த தொழில் நல்ல நிலைக்கு வருமா உங்களுக்கு பொருளாதார ரீதியில் நன்கு உதவும்.

விஷ பூச்சிகள் நம்மிடம் அண்டாமல் இந்த கருங்காலி மாலை நம்மை பாதுகாக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த கருங்காலி மாலையின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த கருங்காலி மரத்தை நீங்கள் தண்ணீரில் போட்டால் நிறம் மாறிவிடுமாம் அதாவது கருங்காலி மரம் கிடையாது அந்த தண்ணீர் நிறம் மாறிவிடுமாம். அந்த தண்ணீரை நாம் எடுத்துக் குளித்து வந்தால் நம் உடலில் இருக்கும் வலி எல்லாம் பறந்து போகுமாம்.

இந்த கருங்காலி மாலையில் உள்ள மருத்துவ குணம் என்னவென்றால் நம் ரத்த ஓட்டத்தை சீராக்குமாம். பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி மலட்டுத்தன்மையை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்க உதவுமாம். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டால் அதனை படிப்படியாக குறைத்து சீரான நிலைக்கு கொண்டு வருமாம்.

ஆண்களின் விந்து தன்மை மற்றும் வீரியத்தை அதிகரிக்குமா. இந்த அளவிற்கு பல அற்புத சக்திகள் நிறைந்தது தான் இந்த கருங்காலி மாலை. அதேபோல இந்த மாலையை இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த மாலையை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை விஷயங்களை தடுக்குமாம். நேர்மறையான விஷயங்களை ஈர்க்குமாம். நேர்மறையான எண்ணங்களையும் சிந்தனைகளையும் இந்த கருங்காலி மாலை உருவாக்குமா.

நன்றி : T Tamil Technology

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்