தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Karungali Maalai : ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் கருங்காலி மாலையை யார் அணியக்கூடாது?

Karungali Maalai : ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் கருங்காலி மாலையை யார் அணியக்கூடாது?

Priyadarshini R HT Tamil
Jun 01, 2024 12:42 PM IST

Karungali Maalai : ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் கருங்காலி மாலையை யார் அணியக்கூடாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

Karungali Maalai : ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் கருங்காலி மாலையை யார் அணியக்கூடாது?
Karungali Maalai : ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் கருங்காலி மாலையை யார் அணியக்கூடாது?

ட்ரெண்டிங் செய்திகள்

இது எதிர்மறை எண்ணங்களைப் போக்கி நம்மிடம் நேர்மறை எண்ணங்களைக் கொண்டுவரும். தியானத்தின் பலன்களை நமக்குத்தரும். இதன் தரம் தவிர இந்த மாலையை யாரெல்லாம் அணியலாம் அல்லது அணியக்கூடாது என்ற சில விதிமுறைகள் இங்கு வகுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்மீக முக்கியத்துவம்

கருங்காலி மாலை, கலாச்சார மற்றும் பக்தி மார்க்கத்தில் தொடர்புடையது. இது பல்வேறு இந்திய பாரம்பரியங்களுள் உள்ளது. இது சிவனுடன் தொடர்புடையது. சிவன், இந்துக்களின் முக்கிய கடவுள் ஆவார். பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் தடைகளை விலக்கக்கூடியவர். 

இந்த கருங்காலி மாலைகள், எதிர்மறை எண்ணங்களை நீக்குபவை என்று நம்பப்படுகிறது. இது பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள், யோகிகள் மற்றும் தியானம் செய்பவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

கருங்காலி மாலை அணிவது குறித்து யார் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்?

குழந்தைகள் மற்றும் சிறுவர்கள்

இது கடுமையான சக்தி வாய்ந்தது என்பதால், இதை குழந்தைகள், புதிதாக பிறந்த சிசுக்களுக்கு அணியக்கூடாது. இந்த கருங்காலி மாலைகள் வெளியிடும் கடும் அதிர்வுகள் குழந்தைகளை பாதிக்கும். இது அவர்களுக்கு வயதுக்கு மிகவும் பாதிப்பையும், எதிர்மறை எண்ணங்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.

குறிப்பிட்ட சில வியாதியஸ்தர்கள்

குறிப்பிட்ட சில வியாதிகளை உடையவர்கள் இந்த கருங்காலி மாலையை அணியக்கூடாது. இந்த கருங்காலி மாலையை நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்கள் மற்றும் இதய பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரையுடன் மட்டும்தான் அணியவேண்டும். இதன் கடுமையான அதிர்வுகள் சில நேரங்களில் இந்தப்பிரச்னைகளை அதிகரிக்கக்கூடும் ஆபத்து உள்ளது.

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிப்பெண்கள் கருங்காலி மாலையை கட்டாயம் அணியவேண்டும். இதன் கடுமையான ஆற்றல், கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும். வளர்ந்துவரும் கருவில் அது குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன் முக்கியத்துவம் அறியாதவர்கள்

கருங்காலி மாலையில் கலாச்சார மற்றும் ஆன்மிக மகத்துவங்கள் குறித்து அறியாதவர்கள், இந்த மாலையை அணியக்கூடாது. அவர்களால் இதன் சக்தியை உணரவும் முடியாது. கையாளவும் தெரியாது. இதன் முக்கியத்துவத்தை நாம் கட்டாயம் தெரிந்துகொண்டுதான் அணியவேண்டும். அதை மதிக்கவும் வேண்டும்.

புரிந்துகொண்டு மதித்து அணிய வேண்டும்

மரியாதை மற்றும் புரிதலுடன் இந்த மாலையை யார் அணிகிறார்களோ அவர்களுக்கு இது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். இதை சுத்தம் செய்வதை முறையாக செய்யவேணடும். மத குருக்களின் அறிவுரைகளின்படி, இந்த மாலையை அணிய வேண்டும். 

இந்த மாலை பாதுகாப்பு மற்றும் பக்தி முற்றுவதற்கும் உதவும். ஒருவர் உடல் மற்றும் ஆற்றலின் முக்கியத்துவத்தை உணர இந்த மாலை உதவும். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலனைத்தரும்.

முடிவுரை

இது பக்தி மார்க்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கருப்பு வண்ணத்தில் சிறிய மணிகள் கோர்த்த மாலையாக இது உள்ளது. இதன் சக்திவாய்ந்த குணம் மற்றும் இதன் கலாச்சார மற்றும் பக்தி வழிபாடுகள், ஒருவரின் தனிப்பட்ட வழிபாட்டுக்கு உதவக்கூடியது. ஒருவரின் ஞானவழிக்கான ஒன்றாக உள்ளது. இதன் பாரம்பரியத்தை மதித்து பக்தி சிரத்தையுடன் ஒருவர் அணிந்து வந்தால் அவருக்கு எண்ணற்ற நன்மைகளை கருங்காலி மாலை கொடுக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்