Karunkali Maalai: இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரும் கருங்காலி மாலை
மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம் கொண்ட கருங்காலி மரம், பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றலை ஈர்க்கும் சக்தியை கொண்டதாக உள்ளது.
கருங்காலி முருகனுக்கு மிகவும் உகந்த மரமாக உள்ளது. செவ்வாய் கிரகத்தின் நற்குணங்களை கொண்டிருக்கும் இந்த மரம் மேஷம், விருச்சிகம், மிதுனம் ராசிகளுக்கும், மிருகசீரிஷம், அஸ்வினி, அனுஷம், பரணி, விசாகம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உகந்ததாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இந்த மாலைகளை அணிவதன் மூலம் அதிர்ஷ்டம், செல்வம் தேடி வரும் எனவும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அத்துடன் கோடீஸ்வர யோகமும் பெறுவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு உண்டு எனவும் சொல்லப்படுகிறது.
வீடுகளிலேயே வளர்க்ககூடிய மரமாக இருந்து வரும் கருங்காலி, வாழ்க்கை சிறப்பானதாக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம் கொண்ட கருங்காலி மரம், பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றலை ஈர்க்கும் சக்தியை கொண்டதாக உள்ளது.
கருங்காலி மரத்தில் ஆற்றல் வெளிப்பாடானது இருப்பதோடு மட்டுமில்லாமல், மருத்துவ குணமும் அதிகம் கொண்டதாக உள்ளது. இந்த மரத்தின் பட்டையை அரைத்து கொடுத்தால் ரத்தம் தொடர்பான நோய்களுக்கு தீர்வாக இருக்கும். மரத்தின் வேர், குடிநீரில் ஊறவைத்து கொடுப்பதன் மூலம் வயிற்றுவலி, நீரிழிவு, உடல் சோர்வு நீங்கும்.
உடல்நிலை சரியில்லாமல் படுத்து இருப்பவர்களுக்கு கருங்காலி கட்டை ஊற வைத்த நீரை மூன்று முறை தெளித்தால் அவர்களிடம் மாற்றத்தை உணரலாம் எனவும், மன சிதைவு நோய்க்கு ஆளானவர்களுக்கு கருங்காலி கட்டைகளை எரித்து அதன் சாம்பலை நெற்றியில் விபூதி போல பூசி வந்தால், நல்ல மாற்றத்தை கண்கூடாக பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது. கருங்காலி மரத்தின் நிழலில் அமர்ந்தாலே பல்வேறு உடல்நல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
கருங்காலி மரத்துக்கு எதிர்மறை சக்தியை அழிக்கும் ஆற்றல் உள்ளது, அதன் காரணமாக இந்த மரத்தில் சிற்பங்கள், பொம்மைகள் செய்து வீட்டில் வைக்கும் பழக்கமும் இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு இந்த மரத்தால் ஆனா கட்டையில் தான் மரப்பாச்சி பொம்மைகள் செய்து கொடுத்தால் தீய சக்திகள் அண்டாமல் இருக்கவும், அவர்களுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கவும் உதவுகிறது.
கருங்காலி இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி சற்று அதிகமாகவே இருக்கும் என நம்பப்படுகிறது. பண வரவு, செல்வங்கள் அதிகரிக்க கருங்காலி மாலை அணியலாம், அல்லது அதன் குச்சிகளை கூட பூஜை அறையில் வைத்துக்கொள்ளலாம். குல தெய்வத்தின் அருள் முழுமையாக பெற்று தரும் மகிமை கருங்காலி மாலைக்கு உண்டு.
டாபிக்ஸ்