Benefits of Hibiscus Tea : கெட்ட கொழுப்பை உடலில் இருந்து துரத்தும்! செம்பருத்தி பூ தேநீரின் நன்மைகள் என்ன?-benefits of hibiscus tea removes bad fat from the body what are the benefits of hibiscus flower tea - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Hibiscus Tea : கெட்ட கொழுப்பை உடலில் இருந்து துரத்தும்! செம்பருத்தி பூ தேநீரின் நன்மைகள் என்ன?

Benefits of Hibiscus Tea : கெட்ட கொழுப்பை உடலில் இருந்து துரத்தும்! செம்பருத்தி பூ தேநீரின் நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil
Mar 26, 2024 07:42 PM IST

Benefits of Hibiscus Tea : கெட்ட கொழுப்பை உடலில் இருந்து விரட்டும் செம்பருத்தி பூ தேநீர் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Hibiscus Tea : கெட்ட கொழுப்பை உடலில் இருந்து துரத்தும்! செம்பருத்தி பூ தேநீரின் நன்மைகள் என்ன?
Benefits of Hibiscus Tea : கெட்ட கொழுப்பை உடலில் இருந்து துரத்தும்! செம்பருத்தி பூ தேநீரின் நன்மைகள் என்ன?

செம்பருத்தி பூ தேநீர், உலர்ந்த செம்பருத்தி பூக்களின் இதழ்களில் இருந்து பெறப்படுகிறது. இது அடர் சிவப்ப வண்ணம் கொண்டது. இது இனிப்பு சுவையானது. இதில் தயாரிக்கப்படும் பானத்தை சூடாகவும், குளிர்வித்தும் சாப்பிடலாம்.

செம்பருத்தி பூ தேநீரின் நன்மைகள்

செம்பருத்தி பூ தேநீர், ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. உடலின் வெப்பநிலையை குறைப்பதற்கும், இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும், தொண்டை வலியை குணப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுத்தப்பட்டது.

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கள் இருந்தவர்களுக்கும், உயர் ரத்த அழுத்த பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தவர்களுக்கும், குறைந்தளவு அந்த பாதிப்பு இருந்தவர்களுக்கும் செம்பருத்தி தேநீர் அதை குறைத்ததாக ஆராய்ச்சிகள் தெரிவித்தன. இரண்டு வகை ரத்த அழுத்தத்தையும் இது குறைத்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

கொழுப்பு

செம்பருத்தி டீ மற்றும் ப்ளாக் டீ குடிப்பவர்கள் இடையே நடந்த ஆய்வில், அது உடலில் உள்ள எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பை குறைக்கவும், எச்.டி.எல் என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவியது. கண்டுபிடிக்கப்பட்டது.

உடல் எடை குறைப்பு

உடல் எடையை குறைப்பதற்கும் செம்பருத்தி டீ பயன்படுத்தப்பட்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் எடை, கொழுப்பு, இடுப்பு சதை ஆகியவற்றை குறைக்க செம்பருத்தி டீ உதவியுள்ளது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் உடல் பருமன் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

செம்பருத்தி டீ இயற்கையிலே கலோரிகள் மற்றும் கஃபைன் இல்லாதது. இதை சூடாகவும், குளிர்ச்சியாகவும் பரிமாறலாம். பசுமையான அல்லது காய்ந்த செம்பருத்தி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வட்கட்டி எலுமிச்சை பிழிந்து, தேன் கலந்து பருகலாம்.

இதில் உள்ள ஆந்தோசியானின்கள் இதய ஆரோக்கியத்துக்கும் உதவுவதாக நம்பப்படுகிறது.

மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துகிறது

செம்பருத்தி பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை பருகும்போது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளை குணமாகிறது. மாவிடாய் சுழற்சியை இது முறைப்படுத்துகிறது. எனவே பெண்கள், மாதவிடாய் ஒழுங்கில்லாத காலங்களில் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். பின்னர் அது சரியானவுடன் அவ்வப்போது பருகி பயன்பெறலாம்.  

ஆபத்துக்கள்

செம்பருத்தி தேநீரை அதிகம் எடுத்துக்கொள்வது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள் எந்த மூலிகை தேநீரையும் மருத்துவரின் பரிந்துரையுடன்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் சில மாத்திரைகளுடன் இவை வினை புரியும் வாய்ப்பு உள்ளது.

மலேரியாவுக்கு மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் செம்பருத்தி டீ பருகக்கூடாது. இது மாத்திரை உடலில் வேலைசெய்யும் திறனை குறைத்துவிடும்.

நீரிழிவு அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மாத்திரைகள் மற்றும் செம்பருத்தி தேநீரும் பருகும்போது, அவர்களின் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்த அளவை கண்காணித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அது சிலருக்கு ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்த அளவை குறைக்க நேரிடும்.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் செம்பருத்தி டீயை குடிக்கக் கூடாது. மிதமான அளவு தேநீர் பருகுவது பாதுகாப்பானது

இந்த தேநீரை மிதமான அளவே பருகி இதன் நன்மைகளை கட்டாயம் பெறுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.