Immunity Boosting Tea : உங்கள் தேநீரை நோய் எதிர்ப்பு சக்தி பானமாக்குவது எப்படி? இதோ ரகசியங்கள்!
By Priyadarshini R Dec 04, 2023
Hindustan Times Tamil
நீங்கள் தேநீர் பிரயரா? ஒரு நாளில் 2க்கும் மேற்பட்ட தேநீர் குடிக்கிறீர்களா? அந்த தேநீரை ஆரோக்கியமானதாக மாற்ற அதில் சில மூலிகைகளை கலக்க வேண்டும். அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
இஞ்சி
இதன் அலர்ஜிக்கு எதிரான தன்மையும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களும், இஞ்சியை சிறந்த நோய் எதிர்ப்புத்திறன் நிறைந்த ஒன்றாக எடுத்துக்கொள்ளலாம். இதன் கார சுவையும் தேநீருக்கு தனியாக சுவையை கூட்டுகிறது. மேலும் அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
பட்டை
பட்டையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது சுவையும் நிறைந்தது. அதுவும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதிலும் அலர்ஜிக்கு எதிரான வேதிப்பொருட்கள் உள்ளது.
புதினா
புதினாவின் சுவை புத்துணர்ச்சியை தரும். இதில் உள்ள மென்தால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது செரிமானத்துக்கும் உதவுகிறது. அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கு மறைமுகமாக உதவுகிறது.
துளசி
துளசி, ஒரு ஆயுர்வேத மருந்து. இதிலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய தன்மைகள் உள்ளது. இதை தேநீரில் சேர்த்து பருகும்போது, உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ரோஸ் ஹிப்ஸ் எனப்படும் ரோஜா பூவின் பழங்கள்
இதில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளது. ரோஸ் ஹிப்ஸை தேநீரில் சேர்த்து பருகும்போது, அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஏலக்காய்
ஏலக்காய் பெரும்பாலும் இந்தியாவில் தேநீரில் கலந்து பருகப்படுகிறது. ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
சோம்பு
சோம்பு இந்திய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப்பொருள் ஆகும். இதில் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. இது செரிமானத்துக் உதவுகிறது. மறைமுக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது.
அஸ்வகந்தா
இந்த மூலிகை, உடல் மன அழுத்தத்தை கையாள உதவுகிறது. நோய் எதிர்ப்பையும் அதிகரிக்கிறது. இதுவும் உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்க தேநீரில் கலந்து பருகப்படுகிறது.
உங்கள் தேநீரில் இந்த மூலிகைகளை கலந்துவிடுங்கள். உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்துவிடுங்கள்.
மேஷம் முதல் மீனம் வரை! ’பட்டம், பதவி, சுகம் தரும் 4ஆம் இடம்!’ ஜோதிடம் அறிவோம்!