தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Coriander Leaves : கண் பார்வையை கூராக்கி, மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மல்லித்தழையின் மகத்துவங்கள் என்ன?

Benefits of Coriander Leaves : கண் பார்வையை கூராக்கி, மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மல்லித்தழையின் மகத்துவங்கள் என்ன?

Priyadarshini R HT Tamil
Jun 14, 2024 07:00 AM IST

Benefits of Coriander Leaves : கண் பார்வையை கூராக்கி, மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மல்லித்தழையின் மகத்துவங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Coriander Leaves : கண் பார்வையை கூராக்கி, மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மல்லித்தழையின் மகத்துவங்கள் என்ன?
Benefits of Coriander Leaves : கண் பார்வையை கூராக்கி, மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மல்லித்தழையின் மகத்துவங்கள் என்ன?

கொத்தமல்லி இலைகள்

நாம் எந்த உணவு செய்தாலும், கடைசியில் மல்லித்தழைகளை தூவிதான் இறக்குவோம். அந்த வகையில் மல்லித்தழை காலை முதல் இரவு வரை நாம் உண்ணும் அனைத்து வகை உணவிலும் பயன்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது.

சுவையும், மணமும் நிறைந்த மல்லி உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இதன் இலைகள் மற்றும் விதைகளும் காயவைக்கப்பட்டு நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து உணவிலும் கலந்து பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கொத்தமல்லித்தழையின் அனைத்து பாகங்களும் உட்ககொள்ளகூடிய ஒன்றுதான்.

இது இத்தாலியில் தோன்றிய ஒரு மூலிகை தாவரம், ஆனால், இந்திய உணவுகளில் நீக்கமற நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு ஆச்சர்யமளிக்கும் செய்தியாக இருக்கலாம்.

மல்லித்தழையில் உள்ள எண்ணெய் சத்துக்கள் நுண்ணுயிர்கள் மற்றும் பூஞ்ஜைக்கு எதிரான உட்பொருட்கள் நிறைந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

மல்லித்தழை பதற்றத்தை குறைத்து உறக்கத்தை அதிகரிக்கும் ஆற்றலை கொண்டது.

இதன் கிருமிகளுக்கு எதிரான குணங்கள், உணவுகளில் ஏற்படும் நோய் கிருமிகளைக் கொல்கிறது.

மல்லித்தழைகளை நாம் உட்கொள்ளும்போது, அது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது உதவுகிறது.

கொத்தமல்லித்தழையில் உள்ள சத்துக்கள்

மல்லித்தழையில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உள்ளது. மேலும் நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்துகள், கால்சியம், மாங்கனீஸ், வைட்டமின் கே மற்றம் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளது. கொழுப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதில் உள்ள லினோலிக் அமிலம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.

100 கிராம் மல்லித்தழையில், 31 கலோரிகள் உள்ளது. 2 கிராம் கார்போஹைட்ரேட், 4 கிராம் புரதம், 0.7 கிராம் கொழுப்பு, 146 மில்லி கிராம் கால்சியம், 5.3 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள், 4.7 கிராம் நார்ச்சத்துக்கள், 24 மில்லி கிராம் வைட்டமின் சி, 635 மில்லி கிராம் வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன.

மல்லித்தழையில் உள்ள நன்மைகள்

கண் பார்வையை கூராக்குகிறது

மல்லித்தழையில் எண்ணற்ற வைட்டமின் ஏ, சி, இ மற்றும் கரோட்டினாய்ட்கள் உள்ளன. இது கண் பார்வையை கூராக்குகிறது. அன்றாட உணவில் நாம் மல்லித்தழையை பயன்படுத்தும்போது, அது வயோதிகத்தில் ஏற்படும் கண் தொடர்பான கோளாறுகளை சரிசெய்கிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது

மல்லித்தழையில் வைட்டமின் சி மற்றும் இ சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்களுடன் வைட்டமின் ஏ சத்து சேரும்போது, அது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது. வைட்டமின் சி சத்துக்கள், உடலில் ரத்த வெள்ளை அணுக்க சிறப்பாக செயல்பட உதவி, இரும்புச்சத்தை உடல் எளிதாக உறிஞ்ச உதவுகிறது.

ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மல்லித்தழைக்கு பார்ப்பவர்களை கவரும் அதன் பசுமை நிறத்தைக் கொடுக்கிறது. இது உடலில் எண்சைம்களின் நடவடிக்கைகளையும் அதிகரிக்க உதவுகிறது. 

இது ரத்த சர்க்கரை அளலை குறைத்து, இன்சுலீன் சுரப்பையும் தூண்டுகிறது. எனவே தினமும் மல்லித்தழைகளை உணவில் சேர்ப்பது அல்லது மல்லித்தழைகள் ஊறிய தண்ணீரை தினமும் பருகுவது நீரிழிவு நோயாளிகளுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.

கெட்ட கொழுப்பை குறைக்கிறது

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் மூன்றில் ஒருவருக்கு உயர் கொழுப்பு பிரச்னைகள் உள்ளது. எனவே மல்லித்தழையை எடுத்துக்கொள்வதை நாம் உறுதிபடுத்தினால், அது கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.

எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

மல்லித்தழையில் எலும்பு ஆரோக்கியத்துக்கு தேவையான கால்சியம், மாங்கனீஸ், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய மினரல்கள் உள்ளன. மல்லித்தழையில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், எலும்புகளை ஆர்த்ரிட்டிஸ் தொடர்பான வலிகளிடம் இருந்து பாதுகாக்கிறது.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

மல்லித்தழையில் எண்ணற்ற நார்ச்சத்துக்கள் உள்ளன. இது செரிமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் தருகிறது. மேலும் இது வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கம், குடல் பிரச்னைகள், வாயுத்தொல்லை போன்ற வயிறு தொடர்பான எண்ணற்ற பிரச்னைகளை தீர்க்கிறது.

சரும ஆரோக்கியத்தை உயர்த்துகிறது

மல்லித்தழையில் உள்ள இரும்பு, வைட்டமின் இ மற்றும் ஏ சத்துக்கள் உடலில் சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. எண்ணெய் சருமத்துக்கு தீர்வாகிறது. சருமத்தில் உள்ள எண்ணெயை உறிஞ்சுகிறது. இது நுண்ணுயிர்கள், பூஞ்ஜை மற்றும் கிருதிகளுக்கு எதிராக செயல்பட்டு சருமத்தை மிருதுவாக்குகிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

உங்கள் உடலில் உள்ள கூடுதல் தண்ணீர் மற்றும் சோடியம் ஆகியவற்றை நீக்க மல்லித்தழைகள் உதவுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. கொழுப்பு அளவையும் குறைக்கிறது. இதனால் இதயத்தை காக்கிறது. உணவை அலங்கரிக்க பயன்படுகிறது. உடலில் சோடியம் அளலை குறைக்க உதவுகிறது.

மூளையை பாதுகாக்கிறது

மூளை செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்க மல்லித்தழைகள் உதவுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. இதற்கு காரணம் மல்லித்தழையின் வீக்கத்துக்கு எதிரான குணங்களால் சாத்தியமாகிறது. மூளை பாதிக்கப்படும்போதுதான் அது வீக்கத்தை ஏற்படுக்கிறது. பதற்றத்தை குறைக்கும் தன்மைகொண்டதால், மனஅழுத்தத்துக்கு சிகிச்சை தரும் மாத்திரைகளில் பயன்படுத்தப்படுகிறது.

தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது

உணவினால் ஏற்படும தொற்றுக்களை தடுக்க மல்லித்தழைகள் உதவுகிறது. சால்மோனில்ல தொற்றுகளை எதிர்க்கிறது. சிறுநீர் பாதை தொற்றுக்களை தடுக்கிறது. இதில் இருந்து பெறப்படும் எண்ணெயும் உணவு தொடர்பான தொற்றுகளை தடுக்கிறது.