Namitha: நீங்களுமா.. தனுஷ் பெயரை நம்பி போன நமீதா.. கடைசியில் காத்திருந்த பெரும் ஏமாற்றம்!
Namitha: நடிகை நமீதா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் கடைசியில் அது ஏமாற்றத்தில் முடிந்ததாக கூறினார்.

தனுஷ் பெயரை நம்பி போன நமீதா.. கடைசியில் காத்திருந்த பெரும் ஏமாற்றம்
Namitha: குஜராத் மாநிலம், சூரத்தில் வசிக்கும் பஞ்சாபி மொழி பேசும் தொழில் அதிபர் முகேஷ் வங்கவாலாவின் ஒரே மகள் நமீதா. இவர் குஜராத் மாநிலம், சூரத்தில் 1981ஆம் ஆண்டு, மே 10ஆம் தேதி பிறந்தார்.
தனது 17 வயதில் மிஸ் சூரத் பட்டம் வென்றதும் ஊடக வெளிச்சத்துக்கு வந்த நமீதா, அதன் பின்னர், படிப்பில் கவனம் செலுத்தி, ஆங்கில இலக்கியத்தைப் படித்து முடித்தார். இதற்கிடையே, மும்பையில் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டே, மாடலிங்கில் வாய்ப்புத் தேடினார்.
மாடலிங் துறையில் இருந்த ஆர்வத்தால்,2001ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மிஸ் இந்தியா’ அழகிப்போட்டியில் பங்கேற்று நான்காவது இடம்பிடித்தார்.