Benefits of Ashguard : இந்த காயை தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிடவேண்டும்! தங்கபஷ்பம் சாப்பிட்ட பலன் கிட்டும்!
Benefits of Ashguard : இந்த காயை தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிடவேண்டும்! தங்கபஷ்பம் சாப்பிட்ட பலன் கிட்டும்!
தேவையான பொருட்கள்
பூசணிக்காய் – ஒரு கீத்து
தேங்காய் பால் – ஒரு கப்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
தயிர் – கால் கப்
செய்முறை
பூசணிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
கடாயை சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதில் நறுக்கிய பூசணிக்காய்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தையும் அரைத்து சேர்க்க வேண்டும். தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வெந்தவுடன், தயிர் கலந்து இறக்கிவிடவேண்டும். சூப்பரான சுவையில் பூசணிக்காய் பச்சடி தயார். இதில் பல்வேறு உணவுகளை சமைத்து ஒரு மண்டலம் தவறாமல் சாப்பிட தங்கபஷ்பம் சாப்பிட்ட அளவுக்கு பலன் கிட்டும். உடல் பொலிவு முதல் அல்சர் வரை அத்தனை நன்மைகளை தரக்கூடியது.
பச்சடியாக செய்யலாம், சாம்பாரில் சேர்க்கலாம் அல்லது கடலை பருப்பு வேகவைத்து தேங்காய் மசாலா சேர்த்து கிரேவியாக செய்து சாப்பிடலாம்.
பூசணிக்காயின் நன்மைகள்
பூசணிக்காயில் கலோரிகள் குறைவாகவே உள்ளது. இதை உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் எடைகுறைக்க உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது. கொழுப்புச்சத்து குறைவாக உள்ளதால் இதை தினமும் எடுப்பது இதய இயக்கத்தை அதிகரிக்கிறது. பூசணிக்காய் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
உடலில் தண்ணீர்ச்சத்தை அதிகரிக்கச்செய்து நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. உடலில் தேவையான அளவு நீர்ச்சத்தை பராமரிக்கிறது. பூசணிக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள், மலச்சிக்கல், வயிறு உப்புசம், வயிறு வலி ஆகியவற்றை போக்குகிறது.
இதன் மலமிலக்கும் தன்மை குடல் இயக்கத்தை அதிகரித்து வயிற்றில் தோன்றும் அசௌகரியங்களை சரிசெய்கிறது. சுவாச மண்டலத்தில் உள்ள சளியை போக்குகிறது. இது நுரையீரல் இயங்க உதவுகிறது. அழற்சி மற்றும் மூச்சு திணறலை குறைக்கிறது.
பூசணிக்காயில் உள்ள வைட்டமின் இ சத்துக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது சருமத்தை வெயில் பாதிப்புகள் மற்றும் தடிப்புகளில் இருந்து காக்கிறது. சரும தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
பூசணிக்காயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் தலைமுடிக்கு, ஊட்டமளிக்கிறது. இதன் ஜெல்லை தலைமுடியின் வேர்களில் தடவினால், அடர்த்தியாக முடிவளர உதவுகிறது. மேலும் தலையில் பேன், பொடுகை நீக்குகிறது.
100 கிராம் பூசணிக்காயில் 86.2 கலோரிகள் உள்ளன. இதில் 3.9 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. சாச்சுரேடட் கொழுப்பு 0.5 கிராம், கார்போஹைட்ரேட் 12.5 கிராம், நார்ச்சத்து 0.6 கிராம், புரதம் 2.0 கிராம், கொழுப்பு 0 மில்லிகிராம், சோடியம் 33.0 மில்லி கிராம், பொட்டாசியம் 359.1 மில்லி கிராம், வைட்டமின் ஏ 9.8 சதவீதம், வைட்டமின் பி6 11.3 சதவீதம், வைட்டமின் சி 30.5 சதவீதம், வைட்டமின் இ 1.1சதவீதம், கால்சியம் 5.1 சதவீதம், மெக்னீசியம் 6.7 சதவீதம், பாஸ்பரஸ் 5.0 சதவீதம், சிங்க் 7.2 சதவீதம், இரும்புச்சத்து 5.7 சதவீதம், மாங்கனீஸ் 12.5 சதவீதம், அயோடின் 5.9 சதவீதம் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்