Benefits of Nutmeg Milk: படுக்கைக்கு முன் ஒரு கப் ஜாதிக்காய் பால்! உடல், மனதில் நிகழ்த்தும் அற்புதம் மாற்றங்கள் இதோ
படுக்கை நேர சூப்பர்ஃபுட்: தூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் ஜாதிக்காய் பால் குடிப்பதால் மன அமைதியையும், நல்ல ஆழமான தூக்கத்தை பெறலாம். ஜாதிக்காய் பலில் இருக்கும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவும் மருந்தாக இருக்கும் ஜாதிக்காய்
இரவில் நல்ல தூக்கத்தை பெறுவதற்கான பானமாக பால் இருந்து வருகிறது. பாலில் ஒரு சிட்டிகை அளவு ஜாதிக்காயை சேர்ப்பது உடல் தளர்ச்சி அடைவதோடு நரம்புகளை ஆற்றுப்படுத்துகிறது. இதனால் ஆழமான, நிம்மதியான தூக்கத்தைத் பெறலாம்.
இந்திய சமையலறையில் இடம்பிடிக்கும் இன்றியமையாத மசாலா பொருளாக ஜாதிக்காய் இருந்து வருகிறது. இது உங்கள் மூளைக்கு ஆற்றலை அளிப்பதோடு, பதட்டத்தை போக்குகிறது, அத்துடன் உங்களது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
பழுப்பு நிறத்தில் இருக்கும் இந்த மசாலா பொருள் இனிப்பு மற்றும் லேசான சுவை கொண்டதாக உள்ளது. பாலில் இதை கலப்பதால் அதன் சுவையானது மேலும் மெருகேறும்.