தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cold Water Bathing : குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் இத்தனை நன்மைகளா? இதோ பாருங்க!

Cold Water Bathing : குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் இத்தனை நன்மைகளா? இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
Nov 30, 2023 05:40 PM IST

குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து இதில் காண்போம்.

குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்
குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

உ டல் வலி மற்றும் சோர்வாக இருக்கும்போது. வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது இதமாகவும், புத்துணர்வாகவும் இருக்கும். குளிர்காலங்களில், குளிர்ந்த சூழலை சமாளிக்க பலரும் வெந்நீரில் குளிக்கவே விரும்புவார்கள். ஆனால் சூடான தண்ணீரில் குளிப்பதால் உடலின் மந்தநிலை அதிகரிக்கவே செய்யும். குளிர்காலங்களில் உடலையும். மனதையும், ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், புத்துணர்வாகவும் வைத்துக்கொள்ள குளிர்ந்த நீரில் குளிப்பதே சிறந்த தீர்வாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். குளிர்ந்த நீரில் குளிப்பதால் தசை வலி குறையும், குளிர்காலத்தில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது. உடலையும், மனதையும் தன்னிச்சையாகவே ஓய்வு நிலைக்கு கொண்டு செல்வதை மேம்படுத்துத்தும். மூளை சுறுசுறுப்பாகி, நாள் முழுவதும் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். 

ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். வெந்நீரில் குளிக்கும்போது சருமம் மேலும் வறண்டு, எரிச்சல் மற்றும் வெடிப்புகள் ஏற்பட வழிவருக்கும். குளிர்ந்த தண்ணீரில் குளிக்கும்போது சருமம் பளபளப்பாகவும், தலைமுடி ஆரோக்கியமாகவும் இருக்கும்.

குளிர்ந்த நீரில் தொடர்ந்து குளித்து வந்தால் சுவாசம் சீராகும். வெந்நீர் குளியலுக்குப் பின்னர் குளிர்ந்த சூழலுக்குச் செல்வது, உடலை வெப்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். இது இதயத்திற்கு அழுத்தம் கொடுப்பதுடன். 

குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது, இயற்கை யாகவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்த்தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும். குளிர்ந்த நீரில் குளிக்கும்போது உடல் தானே முயற்சிக்கும். குளிர்ந்த நீரில் குளிப்பது தசைகளில் இருக்கத்தை உண்டாக்கி, உடல் தோற்றத்தை மேம்படுத்தும்.

 சைனஸ் மற்றும் ஒருசில உடல்நலக் கோளாறுகளுக்கு சிகிச்சை மேற்கொள்பவர்கள், குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதற்கு முன்பு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமானது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்